அரச வம்சத்தினர், பிற்போக்கு சக்திகள் ஆதாயமடையும் ஆபத்து;
நேபாள இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!
புதுதில்லி, செப்.10- நேபாளத்தில் தற்போதைய சூழ்நிலையை பிற்போக்கு சக்திகளும் மன்னராட்சி ஆதரவு சக்திகளும் பயன்படுத்திக் கொள்ளா மல் இருப்பதை அந்நாட்டு இளைஞர்களும் ஜனநாயக சக்திகளும் உறுதி செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலைமை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: விருப்பங்களை நிறைவேற்றுவதில் ஆட்சியாளர்கள் தோல்வி நேபாளத்தில், ‘GenZ’ (1990-க்கும் 2010-ஆம் ஆண்டிற்கும் இடையில் பிறந்த புதிய தலைமுறையினர்) போராட்டங்களின் போது விலைமதிப்பற்ற 20 இளைஞர்கள் உயிரிழந்தது, குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்துகிறது. மக்கள், குறிப்பாக இளைஞர்களின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்ப்பதி லும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்று வதிலும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்ததற்கு எதிராக எழுந்த பரவலான கோபத்தின் வெளிப்பாடாக இத்தகைய போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்த வேலையின்மை அடுத்தடுத்து ஆட்சி செய்த அரசாங்கங் கள் பரவலான ஊழல், அதிகரித்து வரும் வேலையின்மைக்கு தீர்வு காணத் தவறி விட்டன. சமூக ஊடக தளங்கள் மீதான தடையைத் தொடர்ந்து தற்போது வெடித்த ‘GenZ’ போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று, பெரும்பாலான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாத நிலையாகும். கே.பி. சர்மா ஒலி அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்டவுடன், அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். முன்னணி அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட வன்முறையின் பின்னணியில் இது மிகவும்