tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

நாட்டில் இது வரை மொத்தம் 1,96,94, 40,93 (196.94 கோடி) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள் ளது. 

2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு நிதியுதவி செய்ததாகத் தொட ரப்பட்ட வழக்கில் முக்கி யக் குற்றவாளியான லஷ்  கர் இயக்கத்தைச் சேர்ந்த சஜீத் மஜீத்துக்கு பாகிஸ் தான் நீதிமன்றம் 15 ஆண்  டுகள் சிறைத் தண்டனை  விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வங்கதேசத்தில் ஓடும் பத்மா ஆற்றின் மீது 6.15 கி.மீ நீளம் கொண்டு கட்டப்பட்டுள்ள பாலத்தை வங்கதேச ஜனாதிபதி ஷேக் ஹசீனா சனிக்கிழ மையன்று திறந்து வைத் தார். 

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாடு முழு வதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஒன்றிய உள்துறை அமைச் சகம் உத்தரவிட்டுள்ளது. 

கர்நாடகா பெங்களூரு நகரின் முடலாகி என்ற இடத்தில் கழிவுநீர் கால்  வாயில் புதிதாக பிறந்த 4 குழந்தைகள் மற்றும் உலோக பாட்டில் ஒன்றில்  அடைக்கப்பட்ட 3 சிசுக் கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. .

ஆந்திரப்பிரதேசம் கிழக்கு கோதாவரி மாவட் டத்தில் இருந்து பிரிக்கப் பட்ட ‘கோனசீமா’ மாவட்டத்திற்கு ‘‘டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம்’’ என்ற பெயர் மாற்றத்திற் கான கூட்டத்தில் முதல் வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்திலிருந்து 2-ஆவது கட்டமாக இலங்கை மக்களுக்காக அனுப்பப்பட்ட சுமார் 3 பில்லியன் ரூபாய் மதிப்பி லான நிவாரணப் பொருட்  கள் கொழும்பு துறைமுகத்  திற்கு போய் சேர்ந்தன.

உலகில் போலியோ பாதிப்பு காணப்படும் சில நாடுகளில் பாகிஸ்தா னும் ஒன்று. அந்த வகை யில், பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் 8 மாதக்  குழந்தைக்கு போலியோ தொற்று பாதிக்கப்பட்டி ருப்பது கண்டறியப்பட் டது. இதையடுத்து வடக்கு வஜிரிஸ்தானில் மொத்த பாதிப்பு 11 ஆக அதிகரித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் பண அட்டைகளை டோக்  கனைசேஷன் செய்யும்  முறைக்கான காலஅவ காசத்தை  செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அவ காசம் அளித்து ரிசர்வ்  வங்கி உத்தரவிட்டுள் ளது. 

கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தை நாடு  வெற்றிகரமாக முன்னெ டுத்துள்ளது என்று ஒன்  றிய அமைச்சர் மன்சுக்  மாண்டவியா தெரிவித் துள்ளார்.

;