tamilnadu

img

கொரோனா ஊரடங்கால் பரிதாபம்:

நிவாரணம் வழங்க சிபிஎம் கோரிக்கை

நாகப்பட்டினம், ஏப்.29- கொரோனா நோய் பரவலை தடுக்க அமல் படுத்தப்பட்டுள்ள ஊரடங் கால் வேலையின்றி, வருமானமின்றி பசி தாங்க முடியாமல் நாகை மாவட்டம், திருக்குவளையைச் சேர்ந்த கணவன், மனைவி செவ்வாய்க்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டனர். 

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், பெரிய வடக்குவெளி ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த வர் வே.துரைசாமி(55), விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி நாகம்மாள் (50). இவர்களுக்கு சுதா கர் எனும் மகனும் இளமதி எனும் மகளும் உள்ளனர். திரு மணத்திற்குப் பின்னர், மகனும் மகளும் தனிதனியே வசித்து வருகின்றனர். 

நிவாரணம் வழங்க சிபிஎம் கோரிக்கை  நாகப்பட்டினம், ஏப்.29- கொரோனா நோய் பரவலை தடுக்க அமல் படுத்தப்பட்டுள்ள ஊரடங் கால் வேலையின்றி, வருமானமின்றி பசி தாங்க முடியாமல் நாகை மாவட்டம், திருக்குவளையைச் சேர்ந்த கணவன், மனைவி செவ்வாய்க்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டனர்.   நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், பெரிய வடக்குவெளி ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த வர் வே.துரைசாமி(55), விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி நாகம்மாள் (50). இவர்களுக்கு சுதா கர் எனும் மகனும் இளமதி எனும் மகளும் உள்ளனர். திரு மணத்திற்குப் பின்னர், மகனும் மகளும் தனிதனியே வசித்து வருகின்றனர்.

தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகை மாலி, இவர்களது மறை வுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலை கிடைக்காமல், வறுமையில் வாடிய துரைசாமி- நாகம்மாள் தம்பதியர், வாழ வழியில்லாமல் தற்கொலை செய்துள்ளனர். கொரோனா வைரஸ் மக்களைக் கொல்கிறதோ இல்லையோ, வறுமை இவர்களைக் கொன்று விட்டது. நாகை மாவட்ட ஆட்சியரும், திருக் குவளை வட்டாட்சியரும் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவராணத் தொகையும், குடும்பத்தில் ஒரு வருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் ஆகியோர் பாதிக்கப் பட்டுள்ள குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிடவும், 100 நாள் வேலையை ஏழை எளிய மக்களுக்குத் தொடர்ந்து முறையாக வழங்கிடவும் கோரி, நாகைமாவட்ட ஆட்சி யருக்கு மின்னஞ்சலில் கடிதம் அனுப்பியுள்ளனர்.