கணினியும்
கைபேசியும்
கணினியுகம் உண்மைதான்
கைபேசியும் வேண்டும்தான்
கணினியையும் கைபேசியையும்
கணக்காய் கொள்ள வேண்டும்தான்
இணைய இணைப்பில் மூழ்கியே
இருக்கும் காலம் தொலைந்தாலே
வெறுப்பு வரும் வாழ்க்கையில்
பொறுப்பும் அறும் உண்மையில்
தவிர்க்கத்தான் முடியாதெனில்
தவறில்லை பயன்படுத்த
கணினியும் கைபேசியும்
கணக்கில்லாமல் கைக்கொண்டால்
பிணக்காகும் உடல்நலமும்
பாதிப்பாகும் மனநலமும்
வாசிப்பு சுவாசமானால்
வசமாகும் நல்வாழ்க்கை
விளையாட்டு பழக்கமானால்
களையாகும் உடலும் மனமும்
..பெரணமல்லூர் சேகரன்