tamilnadu

img

ஹம்மிங் பறவைகளின் சுறுசுறுப்பு

ஹம்மிங் பறவைகளின் சுறுசுறுப்பு

இறகுகளின் நீளத்தை விட குறைவான இடைவெளியில் பறவைகள் வழியறிந்து எவ்வாறு பறந்து செல்கின்றன என்பது பற்றிய ஆய்வு முடிவுகள் அவற்றின் மகத்தான சுறுசுறுப்பை வெளிப்படுத்துகிறது. மனதை சிலிர்க்கவைக்கிறது. பறக்கும்போதே மிகச்சிறந்த வேகத்துடன் வழியறிதலுடன் பறக்கும் உயிரினங்களில் ஹம்மிங் பறவைகளுக்கே முதலிடம். முன்னும் பின்னும் பறந்து சென்று தேன் குடிக்கும் பறவைகள் வட அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இந்த மிகச்சிறிய பறவைகள் பறக்கும்போது காற்றில் மிதந்து செல்ல  தங்கள் சிறகுகளின் நீளத்தை விட குறைந்த இடைவெளியில் இரு வேறு  முக்கிய கோட்பாடுகளை கடைப்பிடிக்கின்றன.  மற்ற பறவைகள் போல நேர்த்தியாக பின்னோக்கி சிறகு களை அடித்து பறக்கமுடியாது என்றா லும் வனங்களில் வாழும் இவை உணவு அடர்த்தியாக உள்ள காட்டில்  பறந்துசென்று தேனிருக்கும் பூக்களை யும் இவற்றுக்கு பிடித்தமான பூச்சி களையும் எவ்வாறு கண்டுபிடித்து பயன்படுத்துகின்றன என்பது இது நாள்  வரை நீண்ட கால புதிராக இருந்தது. இந்த புதிருக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. “ஹம்மிங் பறவைகள் மிகத் துரிதமாக செயல்படுகின்றன, சிறந்தமுறையில் வழியறிகின்றன என்று பலர் கருதுகின்றனர். வானில் பறக்கும்போது அவற்றின் இந்த திறனை காணமுடியும். ஆனால் இவற்றின் எண்ணற்ற திறன்களில் இது ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு  பதம் மட்டுமே” என்று ஆய்வுக் கட்டுரை யின் முதல் ஆசிரியரும் கலிபோர்னியா பல்கலைக்கழக பெர்க்லி (Berkeley) ஆய்வு மைய விஞ்ஞானியுமான டாக்டர் மார்க் பேட்ஜர் (Dr Marc Badger) கூறுகிறார். நான்கு அன்னாஸ் (An Anna’s) வகை ஹம்மிங் பறவைகள் மற்றும்  இரண்டு போலிப் பூக்கள் பயன் படுத்தப்பட்டு நடந்த இந்த ஆய்வு பற்றி பரிசோதனை உயிரியல் (Experimental Biology  ) என்ற இதழில்  வெளிவந்துள்ளது. ஒரு பூவில் இருக்  கும் தேனை ஒரு பறவை அருந்திய பிறகே அடுத்த பூவில் தேன் நிரப்பப் பட்டது. இதனால் பறவைகள் பூக் களுக்கு இடையில் முன்னும் பின்னும் பறந்து சென்று தேன் குடித்தன. ஆய்வாளர்கள் பூக்களை ஏழு வட்ட அல்லது ஓவல் வடிவில் பறவை களின் இறக்கை நீள வேறுபாட்டிற் கேற்ப 12 செ.மீ. X 6 செ.மீ. என்ற வெவ்வேறு அளவில் உயரமும் அகல மும் உள்ள இடைவெளி இருக்குமாறு பிரித்தனர். ஒவ்வொரு பறவையும் இந்த இடைவெளிகள் வழியாக பிரிக்கப்பட்ட பூக்களை பத்து முறை கடந்து செல்லுமாறு செய்யப்பட்டது. ஒவ்வொரு பூவிற்கும் இடையில் அவை இரண்டு முறை பறந்து செல்வது படமெடுக்கப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு பறவை யும் 140 முறைகள் பறந்து சென்ற காட்சிகள் படங்களாகக் கிடைத்தன. பூவின் பிரிவுகளுக்கு இடையில் உள்ள  சிறிய இடைவெளியின் வழியாக அவற்றின் பறத்தல் உடல் நிலை  எவ்வாறு உள்ளது என்று ஆரா யப்பட்டது. இப்பறத்தல் தொகுப்பில் இரண்டு வித்தியாசமான நிலைகளில் அவை பறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பறத்தலில் பறவைகள்  பின்பக்க மாக இறகுகளை  உடலுக்கு எதிர் நிலையில் இருக்குமாறு செய்தன. ஹம்மிங் பறவைகளின்  பறத்தல் அற்புதம் சிறு இடைவெளியின் வழியாக ஒரு துப்பாக்கிக் குண்டு போல மின்னல் வேகத்துடன் அவை இறகுகளை அடித்துக்கொண்டு பறந்துசென்றன. மற்றொரு முறையில் அவை மெது வான அணுகுமுறையைப் பின்பற்றின.  இம்முறையில் அவை தம் உடலை உருட்டி தலையை இடைவெளியின் வழியாக இறகுகளை அடித்துக் கொண்டே பக்கவாட்டில் திருப்பின. அப்போது ஒரு இறக்கை பின்னோக்கி யும் மற்றொன்று முன்னோக்கிய நிலை யிலும் சரிந்திருந்தது. இந்த இரண்டு தொழில் நுணுக்கங்களையும் இப்பறவைகள் பெரும்பாலான இடைவெளிகளின் வழியாக பறக்கும்போது பின்பற்று வதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்த னர். மிகச்சிறிய இடைவெளியின் வழியாக கடந்து செல்லும்போது அவை  துப்பாக்கிக் குண்டு போல வேகத்துடன்  பறக்கும் முறையைப் பின்பற்றின.  இடைவெளியின் அளவு மற்றும் வடி வத்தை பொருட்படுத்தாமல் பறவை கள் இப்பரிசோதனைகளின்போது துப்பாக்கிக் குண்டு அணுகுமுறையை யே அடிக்கடி பயன்படுத்தின. இவை ஆபத்தான வேகத்துடன் இடைவெளியின் வழியாக நகர்தலை  தவிர்க்க  முதலில் பக்கவாட்டில் பறக் கும் முறையையே கடைப்பிடித்தன. இறகுகள் உடைந்துவிடாமல் இருக்கவே அவை துப்பாக்கிக் குண்டு  முறையை அதிகமாக பயன்படுத்தி யிருக்கலாம் என்று பேட்ஜர் கரு துகிறார். இவை ஒவ்வொரு விநாடியி லும் தங்கள் இறக்கைகளை 40 முதல் 50 முறை அடித்துக்கொள்வது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு சிறகின் அசைவையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு சிறிய இடைவெளிகளின் வழியாக பறக்கும்போதும் தங்கள் உடல் நிலையை மிக வேகமாக மாற்றிக்கொண்டு பறக்கும் இவற்றின் அதிசயத் திறன் மகத்தானது. மனதை நெகிழவைப்பது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.