தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின்(சிஐடியு) 18ஆவது மாநில மாநாடு எழுச்சியுடன் துவங்கியது
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின்(சிஐடியு) 18ஆவது மாநில மாநாடு கடலூரில் வெள்ளியன்று எழுச்சியுடன் துவங்கியது. மாநாட்டைத் துவக்கி வைத்து சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் உரையாற்றினார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், அகில இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுதீப் தத்தா, மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மின்ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர்கள் தி.ஜெய்சங்கர், எஸ்.ராஜேந்திரன், எம்.வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.