மாதர் சங்க 17 ஆவது மாநில மாநாடு மதுரையில் இருந்து புறப்பட்டது ஜானகியம்மாள் நினைவு ஜோதி
மதுரை, செப். 23- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17ஆவது மாநில மாநாடு கன்னியா குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செப்ட ம்பர் 24 முதல் 27 வரை நடைபெறுகிறது. இம் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடெங்கும் அலையலையாகப் பெண்கள் மார்த்தாண் டம் நோக்கி வர இருக்கிறார்கள். அதே போல நினைவு ஜோதிகளும் ஒவ்வொன் றாக மாநிலம் முழுவதும் இருந்து மார்த்தா ண்டம் நோக்கி புறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜானகியம்மாள் நினைவு ஜோதி எடுத்துக் கொடுக்கும் நிகழ்வு சமய நல்லூரில் செவ்வாய்க்கிழமை அன்று நடை பெற்றது. மதுரை புறநகர் மாவட்டத் தலை வர் என்.விஜயா எம்.சி., தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், கருணாநிதி வாழ்த்து கூற, மாநிலக்குழு உறுப்பினர் கே.பிரேமலதா சிறப்புரையாற்றினார். தொடர்ந்து ஜானகி யம்மாள் நினைவு ஜோதியை மூத்த தோழர் பெத்தம்மாள் எடுத்து கொடுக்க மாவட்டச் செயலாளர் எஸ்.சரஸ்வதி பெற்றுக் கொண்டார். சி.இந்திரா நன்றி கூறினார். மாவட்டப் பொருளாளர் சுமதி தேவி, விஜயராணி, மாதர் சங்க முன்னோடி ஈஸ்வரி, விவசாய சங்க செயலாளர் நாகேந்திரன், சிஐடியு தலைவர் ஜாகீர் மற்றும் மனோகரன் கலந்து கொண்டனர்.