தா. பழூரில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு
அரியலூர், ஜூலை 15- அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் தொடங்கியது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. அம்பிகா, தா.பழூர் ஒன்றியச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், கட்சி கிளைச் செயலாளர் கே. மருதகாசி உள்ளிட்ட பலர் தீக்கதிர் சந்தா சேகரிப்பில் ஈடுபட்டனர். சந்தாதாரர்களிடமிருந்து பெறப்பட்ட சந்தாக்களை தீக்கதிர் திருச்சி பதிப்பு மேலாளர் ஜெயபாலிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் சந்தா சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அனைத்து இடைக்கமிட்டி நிர்வாகிகளுக்கும், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்தார்.