tamilnadu

img

தொழில்நுட்ப கதிர் ஜி திவ்யா

டீப்சீக்- இன் புதிய பதிப்பு வெளியானது

சீனாவின் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்சீக் (Deep Seek), தனது பிரதான V3 மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான V3.1 மாடலை வெளியிட்டுள்ளது.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் OpenAI-இன் ChatGPT, மைக்ரோசாஃப்ட்-இன் கோபைலட் போன்ற ஏஐ மாடல்களுக்கு போட்டியாக குறைந்த செயல்பாட்டு செலவில் இயங்கக்கூடிய AI மாடல்களான R1 மற்றும் V3 ஆகியவற்றை வெளியிட்டு இந்த தொழில்நுட்ப உலகை டீப்சீக் அதிர வைத்தது. கடந்த மே மாதத்தில் R1 மாடல் அப்டேட் மற்றும் மார்ச் மாதத்தில் V3 அப்டேட் ஆகியவை வெளியாகின. இந்த நிலையில், டீப்சீக், V3  மாடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான V3.1 மாடலை வெளியிட்டுள்ளது.  டீப்சீக்-V3.1 மாடலில் காரண விளக்க முறையிலும் (reasoning mode), காரண விளக்கம் இல்லாத முறையிலும் (non-reasoning mode) செயல்படக்கூடியதாக உள்ளது. டீப்சீக்-இன் அதிகாரப்பூர்வ செயலி மற்றும் இணைய தளத்தில் இப்போது இயங்கும் V3.1 பதிப்பில், “ deep thinking” பொத்தானை பயன்படுத்தி இந்த இரு செயல்முறைகளையும் மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம்.  இந்த ஏஐ மாடல், சீனாவில் தயாரிக்கப்பட்ட சிப்களுக்கு ஏற்றவாறு இயங்கச் செய்யும் வசதியுடன், கூடுதல் வேகமான செயலாக்கத்திறன் கொண்டுள்ளதாக அந்நிறு வனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு சிப் தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், டீப்சீக் நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது.\

கூகுள் தேடலில் புதிய அம்சம்!

கூகுள் தேடலில் (Google Search), Preferred Sources என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம், பயனர்கள் தாங்கள் விரும்பும் செய்தி நிறுவனங்களின் பக்கங்கள், வலைத்தளங்கள் அல்லது வலைப்பதிவுகளை தேர்வு செய்து முன்னுரிமை அளிக்க முடியும். இப்படி தேர்வு செய்யப்பட்ட செய்திகள் அல்லது தகவல்கள் “Top Stories” பகுதியில் அதிகமாக காண்பிக்கப்படும். இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்: ·    Google-இல் ஒரு செய்தி தொடர்பான தேடலைச் செய்ய வேண்டும். ·    தேடலில் “Top Stories” பகுதியில், new sources ஐகானை கிளிக் செய்ய வேண்டும். ·    அப்போது ஒரு பட்டியல் திறக்கும். அங்கு உங்களுக்கு பிடித்த செய்திகள் அல்லது வெப்சைட்களை source ஆக தேர்வு செய்யலாம். ·    Reload results / Refresh செய்தால், உங்கள் விருப்ப Source-இல் இருந்து வரும் செய்திகளுக்கு கூகுள் முன்னுரிமை அளித்து அதனை தேடலில் காண்பிக்கும். மேலும், தேடல் முடிவுகள் காண்பிக்கப்படும் “From your sources” என்ற பகுதியிலும் அந்த செய்திகளை பார்க்கலாம். தற்போது இந்த அம்சம் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில், ஆங்கிலத்தில் மட்டும் கிடைக்கிறது. மற்ற நாடுகளுக்கும், பிற மொழிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது