‘தமிழன்தான் உலகின் ஆதி குடி’
உறுதி செய்த ஆக்ஸ்போர்ட் பல்கலை. கிருஷ்ணகிரி, செப்.14 - சென்னனூர் அகழாய்வில் கிடைத்த ஒவ்வொரு பொருளும், தமிழன்தான் உலகின் ஆதி குடி என்பதை அறிவியல்பூர்வமாக உறுதி செய்துள்ளதாக, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வுகள் பறைசாற்றுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சென்னனூர்தான், இந்த பெருமையை தமிழர்களுக்கு தந்திருக்கிறது. கற்கால கண்டு பிடிப்புகளுக்குப் புதையல் களமாக திகழ்கிறது இந்த சென்னனூர். அகழ்ந்து ஆராயும்போது, சுமார் ஒரு மீட்ட ரிலேயே கற்காலப் படிவுகளின் குவியல்கள் கிடைத்துள்ளன. தமிழக தொல்லியல் துறை யினர் கடந்த ஆண்டு முதல் சென்னனூர் பகுதி யில் அகழ்வாய்வுகளை நடத்தியுள்ளனர். அதில் கிடைத்த மூலக்கற்கள் மற்றும் மண் மாதிரிகள், ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இந்த ஆய்வகம், பண்டைய பொருட்களின் வயதை ஒளிச்சாய்வு நுட்பத்தின் மூலம் மதிப்பீடு செய்யும். அந்த வகையில், Optically Stimulated Luminescence எனும் நவீன தொழில்நுட்பத்தில், கற்கள் மற்றும் மண் மாதிரிகளின் காலம் துல்லிய மாக கணிக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தான் தமிழர்களை உயரத்தில் அமர்த்தியுள்ளது. சென்னனூரில் கிடைத்த கற்களும் கூரிய கல் கருவிகளும் மைக்ரோலித்திக் (நுண்கற்கா லம்) காலத்தைச் சேர்ந்தவை என்கிறது ஆக்ஸ் ஃபோர்ட் ஆய்வகத்தின் அறிக்கை. சென்னனூரில் கிடைத்த கல் பொருள்களின் வயது கி.மு. 8450 என்கிறார்கள் ஆக்ஸ்ஃபோர்ட் ஆய்வக நிபுணர்கள். தமிழ்நாட்டில் சென்னனூரில் கிடைத்த கல் பொருள்களின் வயது பத்தாயிரம் ஆண்டுகளுக் கும் அதிகம் என்று நிரூபிக்கிறது அறிவியல். காலம் குறித்த இந்த உறுதிப்படுத்தல் மூலம், தமிழ் நாட்டில் கல்லறைப் பண்பாடு தொடங்கி, வேளாண்மை சார்ந்த குடியிருப்புப் பண்பாடு வரை, மக்களின் பரிணாம வளர்ச்சியை துல்லிய மாக, தெளிவாக வரையறுக்க முடியும் என் கிறார்கள் ஆய்வாளர்கள்.
