tamilnadu

img

தமிழக ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்

தமிழக ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 28 - இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவிகிதம் வரி அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி 66 சதவிகிதம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  அமெரிக்கா உடனான ஆடை வர்த்தகம் பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளதும், அதிலும், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 68 சதவிகிதப் பங்களிப்பை திருப்பூர் மட்டுமே கொண்டுள்ளதால், தமிழகம் பெரும் பாதிப்பைச் சந்திக்க உள்ளது.  இந்நிலையில், தமிழகத்தின் ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  “அமெரிக்காவின் வரி 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, திருப்பூரில் ஜவுளி ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரூ. 3,000 கோடி அளவிற்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஜவுளி தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும் வரிச்சலுகையை ஒன்றிய அரசு அதிகரிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.