tamilnadu

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.  இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை, ஆக. 28 - தமிழக காவல்துறை தலைவராக (டிஜிபி) சங்கர் ஜிவால், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று பதவியேற்றார். அவரு டைய பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.  தமிழக காவல்துறையில் இருந்து ஓய்வுபெறும் சங்கர் ஜிவால் உத்தரகண்ட் மாநி லத்தைச் சேர்ந்தவர். பொறி யியலாளரான இவர் ஐ.பி. எஸ். தேர்வு எழுதி வெற்றி  பெற்றார். இவர், சென்னை யின் 108-ஆவது போலீஸ் கமி ஷனராக 2 ஆண்டுகள் பணி யாற்றியவர். மெச்சத்தகுந்த பணிக்காக 2 முறை ஜனாதி பதி பதக்கம் பெற்றவர். டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், புதிய டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்படவுள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது. அதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட வெங்கட்ராமன். 8.5.1968-ஆம் ஆண்டு நாகப் பட்டினத்தில் பிறந்தார். பி.ஏ. (எகனாமிக்ஸ்), எம்.ஏ.  (பொது நிர்வாகம்) முடித்துள் ளார். பின்னர் யு.பி.எஸ்.சி.  தேர்வில் தமிழக கேடரில் 1994-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வானார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 30 அன்று வெளிநாடு புறப்பட வுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அதாவது வெள்ளிக்கிழமை (29ஆம் தேதி) புதிய டி.ஜி.பி. பதவி ஏற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.