மடப்புரத்தில் லாக்-அப் மரணமடைந்த அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.7.50 லட்சம் தமிழக அரசு நிதி வழங்கல்
சிவகங்கை, ஜூலை 14 - சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம், மடப் புரம் கிராமத்தில் போலீ சார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தின ருக்கு ரூ.7.50 லட்சம் நிவா ரண நிதிக்கான காசோ லையை தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறி விப்பின்படி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேரில் சென்று வழங்கினார். மேலும், கடந்த 2.7.2025 அன்று கருணை அடிப்படை யிலான பணி நியமன ஆணையை, மறைந்த அஜித்குமார் சகோதரரான நவீன்குமாருக்கு (27), சிவ கங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றி யம் லிட், (காரைக்குடி) டெக்னீசியன் பணியிடத் திற்கு வழங்கினார். அக்குடும்பத்தினரின் கோரிக்கைக்கு இணங்க மது ரையிலுள்ள ஆவின் நிறு வனத்தில் பணி நியமன ஆணையினை மாற்றி வழங்கிடவும், முன்னதாக இக்குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா தொடர்பாக, மாற்று இடம் வேண்டி விடுக்கப் பட்டுள்ள கோரிக்கை தொடர் பாகவும், உரிய நடவ டிக்கை மாவட்ட நிர்வாகத் தின் சார்பில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்நிலையில், ரூ.7.50 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையையும் திங்களன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில், அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் நேரில் சென்று வழங்கி ஆறுதல் கூறினார். இதில், சிவகங்கை வரு வாய் கோட்டாட்சியர் விஜய குமார், திருப்புவனம் பேரூ ராட்சி தலைவர் சேங்கை மாறன், திருப்புவனம் வட்டாட் சியர் விஜயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.