tamilnadu

மீன்சுருட்டி பைபாஸ் சாலை அமைக்க நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குக! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

மீன்சுருட்டி பைபாஸ் சாலை அமைக்க நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குக! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

அரியலூர் செப். 22-  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில், குருவாலப்பர் கோவில், இளையபெருமாநல்லூர் -முத்து சேர்வாமடம்,  குண்டவெளி கிழக்கு ஆகிய வருவாய் கிரா மங்கள் வழியாக மீன்சுருட்டிக்கு புறவழிச் சாலை (பைபாஸ்) அமைக்கப்பட உள்ளது. மேற்கண்ட கிராமங்களில் 1956 நெடுஞ்சாலைத் துறை சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தி 7. கி.மீ பைபாஸ் அமைக்க இருப்பதால் இக்கிராமங்களில் உள்ள 1/2 காணி, ஒரு ஏக்கர், 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.  மேலும் 1956 நிலமெடுப்பு சட்டப்படி நிலம் எடுத்தால், அடிமாட்டு விலை கிடைப்பதால், அதை மாற்றி 2013 நிலமெடுப்பு சட்டப்படி இழப்பீடு தொகை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து, கலந்தாய்வு கூட்டம் பள்ளிவிடை கிராமத்தில் நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் துரைராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மணிவேல் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி தியாகராஜன் மற்றும் பத்மாவதி, மைதின்ஷா கலந்து கொண்டனர். அதே போல மற்ற 3 கிராமங்களிலும் நிலம் கொடுக்கும் விவசாயிகளை திரட்டி சங்கம் அமைத்து, தொகை விவசாயிகளுக்கு, 3 மடங்கு இழப்பீடு தொகை கிடைத்திட போராட்டம் நடத்துவது என தீர்மாணிக்கப்பட்டது.