தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில மாநாட்டு ஜோதி பயணத்திற்கு சிறப்பான வரவேற்பு
திருச்சிராப்பள்ளி, ஆக, 7- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு 18 ஆவது மாநில மாநாடு கடலூரில் 8 ஆம் தேதி தொடங்கி வரும் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலியில் இருந்து தோழர் பி.தியாகராஜன் நினைவு ஜோதி பயணம் மணப்பாறைக்கு வந்தது. ஜோதி பயணத்திற்கு மணப்பாறை கோட்டத்தின் சார்பில், புதனன்று மாலை பேருந்து நிலையம் முன்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பாறை கோட்டம் தலைவர் ப. அந்தோணிசாமி, துணை தலைவர் செ.கண்ணன், செயலாளர் டி.ரியஜ் தீன் மற்றும் திட்டச் செயலாளர் பழனியாண்டி மற்றும் கோட்ட கமிட்டி உறுப்பினர்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து பேசினர். திருவாரூர் திருவாரூருக்கு வருகை தந்த வெண்மணி நினைவு ஜோதி பயண குழுவினரை, திருவாரூர் மின் ஊழியர் மத்திய அமைப்பு திருவாரூர் மின் வட்ட கிளை சார்பாக, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக, அமைப்பின் திட்டத் தலைவர் எஸ். சகாயராஜ், திட்டசெயலாளர் கே.ராஜேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜோதி பயனக்குழு தலைவரும், மாநில துணைத் தலைவருமான எஸ்.ரெங்கராஜன், மாநிலச் செயலாளர்கள் எஸ். ராஜாராமன், எஸ். அகஸ்டின் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வில் சிபிஎம் செயற்குழு உறுப்பினரும், சிஐடியு பொறுப்பாளருமான ஜி.சுந்தரமூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. மாலதி, பொருளாளர் கே.கஜேந்திரன் மற்றும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருவாரூர் கிளை ஊழியர்கள், ஆட்டோ உள்ளிட்ட தோழமை சங்கத்தின் நிர்வாகிகள் ஏ.ஒன்.மணி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு 18 ஆவது மாநில மாநாடு கடலூரில் நடைபெற இருப்பதால், வெண்மணி தியாகிகள் ஜோதி பயணம், நாகப்பட்டினத்தில் துவங்கியது. தோழர் வி.பி.நாகை மாலி எம்எல்ஏ. ஜோதியை எடுத்து, தோழர் எஸ்.ரங்கராஜன் தலைவர், பயண குழு மாநில துணைத்தலைவர் ஜோதியை பெற்றுக் கொண்டனர். பயண குழு தோழர்கள் எஸ்.ராஜாராமன், மாநிலச் செயலாளர் கே. இராஜேந்திரன், திருவாரூர் திட்டச் செயலாளர் டி. காணிக்கைராஜ், தஞ்சை திட்டச் செயலாளர் எம்.வெற்றிவேல், நாகை மாவட்டப் பொருளாளர் திருவாரூர் மாவட்டச் செயலாளர் இரா.மாலதி, சிஐடியு மற்றும் சிஐடியு மத்திய அமைப்பின் மண்டல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஜோதிப்பயணத்திற்கு, நாகப்பட்டினம் எஸ்.சி அலுவலகம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு, திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில், ஜோதி பயணத்தை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜோதி பயணத்திற்கு தோழர் ஜி.வீரபாண்டியன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மன்னார்குடி கோட்டச் செயலாளர் தலைமை வகித்தார். பயணக் குழு மாநில துணைத்தலைவர் தோழர் எஸ். ரங்கராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிஐடியு மத்திய அமைப்பின் மண்டல மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாநில மாநாடு மற்றும் அதன் கோரிக்கைகள் குறித்து, பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு, அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இளங்கோவன், ஓய்வு பெற்ற நல அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ராஜகுமாரன், ஓய்வு பெற்ற நல அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் கருணாநிதி, மாவட்டப் பொருளாளர் கண்ணையன், சிஐடியு மாவட்ட தலைவர் ரெங்கநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோகுலகிருஷ்ணன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கலையரசி ஆகியோர் பேசினர். இதில், தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுதுறையாகவே நீடிக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நியாயமான ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்,ஒப்பந்த ஊழியர் மற்றும் பகுதிநேர ஊழியர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். தஞ்சாவூர் பயணக் குழுவிற்கு, தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகில் சிஐடியு மாவட்டக் குழுவின் சார்பில் மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலச் செயலாளர் து.கோவிந்தராஜு, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச் செயலாளர் எஸ்.ராஜாராமன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் வெ.சேவையா, மாவட்டச் செயலாளர் துரை. மதிவாணன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், ஹெச்.எம்.எஸ் மாவட்டச் செயலாளர் சின்னப்பன், விசிக தொழிலாளர் விடுதலை முன்னணி தலைவர் யோகராஜ், விசிறி சாமியார் முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பேர்நீதி ஆழ்வார், கே.அன்பு, கே.வீரய்யன், மில்லர் பிரபு, மின் ஊழியர் மத்திய அமைப்பு தஞ்சை மாவட்டச் செயலாளர் பி.காணிக்கை ராஜ், தலைவர் அதிதூத மைக்கேல் ராஜ் ,திருவாரூர் திட்டச் செயலாளர் ராஜேந்திரன், நாகை திட்டச் செயலாளர் வெற்றி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.