பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்குக் கீழ் உள்ள உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து துணை முதலமைச்சர், அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்திலும் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.