tamilnadu

img

குடிமைப் பணித் தேர்வில் தமிழக தேர்வர்கள் சாதனை!

குடிமைப் பணித் தேர்வில்  தமிழக தேர்வர்கள் சாதனை!

மதுரை, மார்ச் 6 -  யுபிஎஸ்சி எனப்படும் குடிமைப்பணி தேர்வுகளுக்கான முடிவுகள் அறி விக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர், முதல் 10 இடங்களுக்கு வந்து  சாதனை படைத்துள்ளனர். மேலும் 10  ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக தேர்வர் கள் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர். 2025 ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் மார்ச் 6 அன்று வெளி யிடப்பட்டன. இதில் மொத்தம் 958 பேர் தேர்ச்சி பெற்று, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப் எஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.  பொதுப் பிரிவில் இருந்து அதிகபட்ச மாக 317 பேர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  ஓபிசி பிரிவில் இருந்து 306  பேரும், எஸ்சி பிரிவில் இருந்து 158 பேரும், எஸ்டி பிரிவில் இருந்து 73 பேரும் தேர்ச்சி  பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளின்படி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ் அக்னிஹோத்ரி அகில இந்திய அள வில் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், மதுரை வாடிப்பட்டி யைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே, அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தையும்,  செங்கல்பட்டைச் சேர்ந்த ராஜா மொகை தீன் 7-ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.  இந்த ஆண்டு யுபிஎஸ்சி நேர்காணலில் தமிழகத்தைச் சேர்ந்த 140 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் வெற்றிபெற்றிருப்பவர்களில் அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்த ராஜேஸ்வரி சுவே உட்பட 56 தேர்வர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.