tamilnadu

img

முதுபெரும் தமிழக தொல்லியல் ஆய்வாளர் இரா.நாகசாமி காலமானார்

சென்னை, ஜன. 23- பத்மபூஷன் விருது பெற்ற தமிழ்நாட்டின் புகழ் பெற்ற தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் இரா.நாகசாமி காலமானார். பல தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியுள்ள இரா.நாகசாமி, சேக்கிழாரின் பெரியபுராண வரலாற்று பாதை குறித்த ஆய்வுப்பணிக்காக தமிழக அரசின் கலைமாமணி விரு தினை பெற்றார். மேலும், லண்டன் நடராஜா வழக்கில் லண்டன் உயர்நீதிமன்றத்தில் நிபுணத்துவ சாட்சியாக இரா.நாகசாமி ஆஜரானார், இவருக்கு 2018 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப் பட்டது. 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி பிறந்த இவர் சென்னை பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருத மொழி யில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர். தொல்லியல் படிப்பை படித்த இவர் 1963  முதல் 1966 ஆம் ஆண்டு வரை  தமிழ்நாடு அரசின் தொல்லி யல் துறை அதிகாரியாகவும், 1966 முதல் 1988 வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இய க்குநராகவும் இருந்தவர். 

மோடி புதிதாக பயன் படுத்தும் காரின் விலை யில் ‘‘அமர் ஜவான் ஜோதி’’ அணையா விளக்கை 100 ஆண்டு களுக்கு பராமரிக்க முடியும்; அவரது கை கடிகாரத்தின் விலையில் அந்த ஜோதியை ஒரு ஆண்டுக்கு பராமரிக்க முடியும் என பத்திரிகை யாளர் சோனாலி ரானடே, டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.

;