தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் கோவையில் திறப்பு
கோயம்புத்தூர், அக். 9 - கோவை - அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை, 10.1 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,791.23 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழனன்று (அக்.9) திறந்து வைத்தார். இந்த பால த்துக்கு கோவையின் புகழ்பெற்ற விஞ்ஞானி ஜி.டி.நாயுடு (கோபால்சாமி துரைசாமி) பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவை உப்பிலிபாளையம் முதல் நீலாம்பூர் வரையிலான 16 கி.மீ. கொண்ட அவிநாசி சாலை, இந்நக ரின் மத்திய ரேகையாக உள்ளது. இந்த சாலையில் நகரின் முக்கியப் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனை, விமான நிலையம் அமைந்துள் ளன. எனவே, போக்குவரத்து நெரி சலை குறைக்க உயர் மட்ட மேம்பா லம் அமைக்கப்பட்டது. நான்கு வழிப்பாதையான இந்த மேம்பாலத்தில், அறிஞர் அண்ணா சிலை, நவ இந்தியா, ஹோப் காலேஜ், விமான நிலையம் ஆகிய நான்கு இடங்களில் ஏறு தளம் மற்றும் இறங்குதளங்கள் அமைக்கப்பட்டுள் ளன. பாலத்தின் மத்தியில் 4 அடி அகலத்துக்கு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தி லேயே முதன் முறையாக, மழை நீர் சேக ரிப்பு அமைப்பு இந்த பாலத்தில் முன் னோடி முயற்சியாக நிறுவப்பட்டுள்ளது. பாலம் கட்டுமானத்தில் 1.5 மீட்டர் அகல நடைமேடையுடன் கூடிய வடி கால் அமைப்பு 13 ஆயிரத்து 560 மீட்டர் நீளத்துக்கு திட்டமிடப்பட்டு, 9115 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மதுரை ஊமச்சி குளத்தில் இருந்து நத்தம் வரையி லான 7.5 கி.மீ. நீளம் கொண்ட உயர் மட்ட மேம்பாலமே, இதுநாள் வரை தமிழகத்தின் நீளமான பால மாக இருந்தது. தற்போது, உப்பிலி பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை யிலான 10.1 கி.மீ. நீளமுள்ள அவி நாசி ரோடு மேம்பாலம் தென்மாநி லங்களின் மிக நீண்ட மேம்பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. திறப்பு விழாவில் அமைச்சர்கள் எ.வ. வேலு, சு.முத்துசாமி, தா.மோ. அன்பரசன், மு.பெ.சாமிநாதன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, செந்தில் பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர். ஈஸ்வரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், ஜி.டி. நாயுடு குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.
