tamilnadu

img

தையல் கலைஞர்கள் சம்மேளன சிறப்பு பேரவை

தையல் கலைஞர்கள் சம்மேளன சிறப்பு பேரவை

கரூர், ஜூலை 13-  தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளன கரூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம், சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட கெளரவத் தலைவர் ஆர்.ஹோச்சுமின் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எம். ஐடாஹெலன் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. முருகேசன், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் ப. சரவணன் ஆகியோர் பேசினர்.  மாவட்ட் தலைவர் கே.ராஜா, மாவட்ட துணைத் தலைவர்கள் ராமகிருஷ்ணன், எஸ்.பி. ராஜேந்திரன், வி. சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் எஸ்.கணேசன் நன்றி கூறினார்.  தையல் தொழிலாளர்கள் சங்க மாவட்ட கெளரவ தலைவராக கே.ராஜா, மாவட்ட தலைவராக விஜயராஜன், செயலாளர் எம்.சதீஸ், பொருளாளராக எஸ்.கணேசன், மாவட்ட துணைத் தலைவர்களாக ராமகிருஷ்ணன், ரஞ்சிதா, கிருஷ்ணராஜ், மாவட்ட துணைச் செயலாளர்களாக சக்திவேல், ராஜேந்திரன், ஜெயலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தையல் தொழிலா ளர்களுக்கு சம்பள பணத்தை வங்கி கண க்கில் டெபாசிட் செய்திட வேண்டும். கரூர்  மாவட்டத்தில் டெக்ஸ்டை ல்ஸ் உள்ளிட்ட நிறுவ னங்களில் பணிபுரியும்  தையல் தொழிலாளர் களுக்கு  தினக்கூலியாக ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.