tamilnadu

சேலத்திலிருந்து சென்னையில் நடைபெற்ற அறுவைசிகிச்சை

சேலத்திலிருந்து சென்னையில் நடைபெற்ற அறுவைசிகிச்சை

சென்னை, ஆக.12 தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக சேலத்திலிருந்து 340 கி.மீ தொலைவில் உள்ள சென்னையில் தொலை நிலை அறுவை சிகிச்சையை  (Telesurgery)  பிரசாந்த் மருத்துவமனை வெற்றிகர மாக நடத்தியுள்ளது. இதுமருத்துவத் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியை காட்டுகிறது. இந்த முக்கிய அறுவை சிகிச்சை, தமிழ்நாடு அறுவை சிகிச்சை நிபு ணர்கள் சங்கத்தின் மாநில மாநாடு TNASICON 2025ன் ஒரு பகுதியாக நடை பெற்றது.  பிரஷாந்த் மருத்துவமனை குழுவின் ரோபோட்டிக் அறுவை சிகிச்சைத் துறையின் தலைமை மருத்துவர் டாக்டர் பாரிமுத்துக்குமார், சேலத்தின் தரன் மருத்துவமனையில் இருந்து, சென்னையின் வேளச்சேரியில் உள்ள பிரஷாந்த் மருத்துவமனை யில் இருக்கும் நோயாளிக்கு தொலைவிலிருந்து இந்த அறுவை சிகிச்சை வெற்றி கரமாக செய்து முடித்தார். 45 வயது ஆணுக்கு ஹெர்னியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, பிரஷாந்த் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். சுமார் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் நீடித்த அறுவைச் சிகிச்சை, முன்னேற்றம் பெற்ற ரோபோடிக் தொழில் நுட்பத்தின் மூலம் நடை பெற்றது. சேலத்தில் இருந்த டாக்டர் பாரிமுத்துக்குமார்  சிகிச்சை வழங்க, சென்னை வழியிலிருந்து ஒரு அனுபவமிக்க மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் குழு பாதுகாப்பான முறை யில் செயல்பாட்டை மேற்செய்தது. பிரஷாந்த் மருத்துவ மனை குழுவின் இயக்குநர் டாக்டர் ஜி.பிரஷாந்த் கிருஷ்ணா இந்த முயற்சியை பாராட்டி யுள்ளார்.