தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு
நாகப்பட்டினம், ஆக. 19- சென்னை தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகம் முன்பு, தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை மு.குருசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுதா, எஸ்.திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சு.வளர்மாலா, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் வி.கவிதா, நாகை நகராட்சி தூய்மை பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த தனலெட்சுமி, உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த டி. தங்கமணி, மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர். எஸ். சுதா நன்றி கூறினார். கும்பகோணம் தூய்மைப் பணியில் தனியார் மயத்தை கைவிட வேண்டும். அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி. ஜேசுதாஸ் தலைமை வகித்தார். சிஐடியு தஞ்சை மாவட்டத் தலைவர் எம். கண்ணன், மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், சிபிஎம் மாநகரச் செயலாளர் செந்தில்குமார், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பழ. அன்புமணி, ஆட்டோ சங்கம் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், உள்ளாட்சி ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். புதுக்கோட்டை தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு உள்ளாட்சித் தொழிலாளர் சங்கம் சார்பில், திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலாளர் க. முகமதலி ஜின்னா தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு, மாநகரப் பொறுப்பாளர் எம்.ஏ.ரகுமான் உள்ளிட்டோர் பேசினர். திருச்சிராப்பள்ளி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாநிலக்குழு உறுப்பினர் செல்வி, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஐடியு சார்பில் திங்கள் கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு பெரம்பலூர் மாவட்ட கன்வீனர் எஸ். அகஸ்டின் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ரங்கநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சந்திரன், பிரகாஷ் பரமசிவம், குணசேகரன், மணி ஆகியோர் பங்கேற்றனர். கரூர் சிஐடியு கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சி.முருகேசன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டத் தலைவர் சி.ஆர். ராஜா முகமது, மாவட்டச் செயலாளர் எம். சுப்பிரமணியன், தள்ளுவண்டி, தரைக் கடை தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.தண்டபாணி, மாவட்ட துணைத் தலைவர் கே.வி. கணேசன், எஸ். கிருஷ்ணமூர்த்தி, ப. சரவணன், மாவட்டப் பொருளாளர் என்.சாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.