கூகுள் கிளவுட் பிரிவில் தலைமை பதவி கார்த்திக் நாராயணனுக்கு சுந்தர் பிச்சை வாழ்த்து!
சென்னை, அக். 22 - ‘ஆக்சென்சர்’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான கார்த்திக் நாராய ணன், ‘கூகுள் கிளவுட்’ பிரிவின் தலைமை தயாரிப்பு மற்றும் வணிக அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். கூகுள் கிளவுட் தலைமை செயல் அதிகாரி தாமஸ் குரியன், இது குறித்து கூறுகையில், “செயற்கை நுண்ணறிவு, கிளவுட், டெவலப்பர் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர் கார்த்திக் நாரா யணன் என்றும், இவரது அனுபவ மும் தொழில்நுட்ப அறிவும் கூகுள் கிளவுட் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த செயற்கை நுண்ணறிவு பயன் ்பாடுகளை வழங்க உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார். கூகுள் தலைமை செயல் அதி காரி சுந்தர் பிச்சை தனது வாழ்த்துச் செய்தியில், கார்த்திக் நாராயணன் கூகுள் கிளவுட் வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு துறையில் பல மாற்றங்களை கொண்டுவர முடி யும் என்ற நம்பிக்கை தெரிவித் துள்ளார். திருச்சியைச் சேர்ந்தவரான கார்த்திக் நாராயணன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கணினி மற்றும் வணிகத் துறையில் பட்டங்கள் பெற்றவர். ஆக்சென்சர் நிறுவ னத்தின் உலகளாவிய தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் தொழில்நுட்ப பிரிவு தலைவராக பணியாற்றியவர். அதற்கு முன்னர் எச்சிஎல் டெக் மற்றும் இன்ஃபோ சிஸ் நிறுவனங்களிலும் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகித்த வர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூகுள் கிளவுட் தயா ரிப்புகள், டெவலப்பர் கருவிகள், தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவுகளின் தயாரிப்பு மற்றும் பொறி யியல் குழுக்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளார். அரவிந்த் ஸ்ரீனிவாஸ், அஷோக் எலுஸ்வாமி, விவேக் ரவிசங்கர், சுவாமி சிவசுப்ரமணியன் போன்ற தொழில்நுட்ப உலகை ஆளும் தமிழர்கள் பட்டியலில் கார்த்திக் நாராயணனும் இணைந்துள்ளார்.