மதுரை,ஜன .9- மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் கரும்பு அரவையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆலை முன்பு 27 ஆவது நாளாக ஜனவரி 9 ஞாயிறன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கரும்பு விவசாயிகள் தங்களது நிலங்க ளில் விளையும் கரும்புகளை அறுவடை செய்து லாரிகள் மூலம் இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழங்கி சர்க்கரை உற்பத்தியை தொடங்குவர். இந்த ஆண்டு மட்டும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் 2 ஆயிரம் ஏக்கர் அளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலை கடந்த 2 ஆண்டுகளாக இயங்கவில்லை. கரும்பு விவசாயிகள் இந்தாண்டு ஆலை துவங்கும் அறி வுப்புக்காக காத்திருக்கின்றனர். இந்த போராட்டத்திற்கு கரும்பு விவசாயி கள் சங்க மாநிலத் தலைவர் என். பழ னிச்சாமி தலைமை வகித்தார். சங்க மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சொ.பாண்டி யன், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி கள் என்.ஸ்டாலின் குமார், ராம்ராஜ், பி.போஸ், சுப்ரமணி, கார்த்திக், கிருஷ்ண மூர்த்தி, எஸ்.முருகன், பெரியகருப்பன் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.