ஸ்கேன் இந்தியா
அராஜகம்
திடீரென்று திமுதிமு வென்று நுழைந்த கும்பலைப் பார்த்து நான்கு தொழிலா ளர்களும் வெலவெலத்துப் போய் நின்றனர். “நீங்கள் எல்லாம் வங்கதேசத்தவர்தானே.. உட னடியாக வெளியேறுங்கள்” என்று கத்தினர். ஒடிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் இது நடந்திருக்கிறது. மேற்குவங்கம் முர்சிதா பாத்தைச் சேர்ந்த அந்த நான்கு பேரும் ஐந்து முதல் பன்னிரெண்டு ஆண்டுகளாய் அங்கு கூலித்தொழிலாளர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் பாக மற்றொரு தொழிலாளி திபு சந்திர தாஸ் என்ப வர் கொலை செய்யப்பட்டிருந்தார். இதனால் பதற்றமான சூழல் இருந்து வந்தது. ஒடிசாவில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, வெளிமாநிலங்க ளைச் சேர்ந்தவர்கள் மீது, மத வேறுபாடின்றி தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த நான்கு பேரும் உயிருக்குப் பயந்து, தங்கள் சொந்த ஊருக்கே திரும்பி விட்டனர்.
அலங்கோலம்
நாடு முழுவதும் அவசர கோலத்தில் நடை பெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தம் உத்தரப்பிரதேசத்தில் அலங் கோலமாக மாறியிருக்கிறது. அக்டோபர் 27ஆம் தேதியன்று தொடங்கிய இந்தப் பணி, எவ்வளவு நீக்க வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக நகர் கிறது. சீர்திருத்தப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது அதை வைத்தே அழுத்தங்கள் தரப்படு கின்றன. சில உயிரிழப்புகள் பெரும் அதிருப்தி யைக் கிளப்பியுள்ளன. தேர்தல் ஆணையமோ, இவற்றைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் நகல் பட்டியல் வெளியிடுவதாக அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பை அவர்களால் நிறை வேற்ற முடியவில்லை. மூன்றாவது முறையாக நகல் பட்டியல் வெளியிடுவது தள்ளிப் போயி ருக்கிறது. இப்போது, ஜனவரி 6ஆம் தேதி யன்று வெளியிடுவதாக மீண்டும் அறிவித்தி ருக்கிறார்கள்.
அட்டூழியம்
காஷ்மீரைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் இமாச்சலப்பிரதேசம் மற்றும் ஹரியானா வில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். காஷ்மீரத்து சால்வைகளுக்கு குளிர்காலத்தில் வட இந்திய மாநிலங்களில் கிராக்கி உண்டு. ஒவ்வொரு ஆண்டும் இந்த காலகட்டத்தில் காஷ்மீரிலிருந்து சால்வைகளைத் தோள்களில் சுமந்து கொண்டு ஒரு சால்வைக்கு 50 ரூபாய் கிடைக்கும் என்ற நோக்கத்தில் சிறு வியாபாரி கள் வருவது வழக்கமானதாகும். இமாச்சல் மாநி லத்தின் பல நகரங்களில் கடந்த 20 ஆண்டுகால மாகத் தங்கியிருந்து சால்வை விற்பனை செய்யும் கடைகளைப் போட்டுத் தங்கள் வாழ்வாதா ரத்தைக் கவனித்துக் கொள்பவர்களும் உண்டு. அவர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலை பாஜக மற்றும் அக்கட்சியின் ஆதர வாளர்கள்தான் நடத்தி வருகிறார்கள்.
அவசியம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி யொன்றில்,”கல்விதான் பழங்குடியின ரின் மேம்பாட்டுக்கு உதவும்” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியிருக்கிறார். இது குறித்துப் பல்வேறு பழங்குடி நல ஆர்வலர்கள் வரவேற்றுக் கருத்து தெரிவித்துள்ளனர். அதே வேளையில், குடியரசுத்தலைவருக்குத் தெரியும் விஷயம், ஒன்றிய அரசுக்குத் தெரியாதா..? பழங் குடியினரின் கல்விக்கான சிறப்புத் திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லையே என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு, படித்த பழங் குடியினர் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண் டும் என்று குடியரசுத் தலைவர் விட்டுள்ள அழைப்பே, அரசின் செயல்பாட்டை விமர்சிக் கும் வகையில்தான் உள்ளது என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். நாட்டின் மொத்த எழுத்தறி வுக்கும், பழங்குடியினரின் எழுத்தறிவுக்கும் இடையிலான விகிதத்தில் பெரும் இடைவெளி இருப்பதையும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். - கணேஷ்
