tamilnadu

img

சு.வெங்கடேசன் எம்.பி., தொகுதி நிதியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு! 

மதுரையில் புதிய அங்கன்வாடி மையத்தினை சு.வெங்கடேசன் எம்.பி., திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சி, வார்டு எண் 5-இல் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார்.

இந்நிலையில், கட்டடப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து இன்று (வியாழக்கிழமை) புதிய அங்கன்வாடி மையத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு சு.வெங்கடேசன் எம்.பி., திறந்து வைத்தார்.

உடன் மதுரை துணை மேயர் டி.நாகராஜன், மண்டல தலைவர் ச.வாசுகி சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, உள்ளிட்டர் பங்கெடுத்தனர்.