ஆபாசமாக பேசிய பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் தர்ணா
கடலூர், ஆக. 14- தேவனாம்பட்டினம் பெரி யார் அரசு கலைக் கல்லூரி யில் கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரியில் பயின்று வந்த இரண்டாம் ஆண்டு மாணவியை அத்துறைப் பேராசிரியர் அருள் செல்வ ராஜ் என்பவர் வருகை பதிவேடு குறைவாக உனக்கு 46 சதவிகிதம்தான் உள்ளது. தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார். மேலும் , யாரும் இல்லாத தருணத்தில் என்னோடு தனி மையில் பேச வரவேண்டும் என்றும் சகக் கல்லூரி மாணவரோடு இணைத்து ஒருமையில் ஆபாசமாகப் பேசியுள்ளார். இத்துடன், உன்னைத் தேர்வு எழுத அனுப்ப வேண்டும் என்றால் என்னைத் தனி மையில் சந்திக்க வேண்டும். அப்போது, உனக்கு என்ன பேச வேண்டும் என்று தோன்றுதோ அங்கு வந்து பேசு என்று அழைத்துள்ளார். பேராசிரியரின் இத்தகைய செயலைக் கண்டித்து மாண வர் அமைப்புகள் ஒன்றுபட்டுக் கல்லூரியில் முறையிட்டு போராட்டம் நடத்தினர். இவ்வளவு நடந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், மாணவியைக் கல்லூரிக்குள் அனுமதிக்க மறுத்த நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்த்தும் மாணவியை உடனடியாக வகுப்பறைக்குள் அனுப்ப வலியுறுத்தியும், கல்லூரி முதல்வர் அறையை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்திய மாணவர் சங்கம், முற்போக்கு மாணவர் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இணைந்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தியவர்களிடம் கல்லூரி முதல்வர் பேசினர். அப்போது, மாணவியை உடனடியாக கல்லூரிக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்தார்.