tamilnadu

img

பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்

பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்

உடுமலை, செப்.12- உடுமலை  பார்த்தசாரதிபுரம் பகுதி யில் 15 நாட்களாக முறையாக பேருந்து கள் இயக்கப்படாததால், கடும் அவ திக்குள்ளாவதாக கூறி பள்ளி மாண வர்கள் வெள்ளியன்று  உடுமலை – பழனி  நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். உடுமலை தாலுகா எலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பார்த்தசாரதி புரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற் பட்ட குடும்பத்தினர், தோட்டத்து சாலை  பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி யில் இருந்து உடுமலையில் உள்ள  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 20  கி.மீ. செல்ல வேண்டும். எலையமுத் தூர் மற்றும் கொமரலிங்கம் பகுதிக ளுக்கு ஐந்து கிலோ மீட்டர் செல்ல வேண்டும். இந்நிலையில் கடந்த 15 நாட் களாக காலை மற்றும் மாலை நேரங்க ளில் முறையாக பேருந்துகளை இயக்க படவில்லை. இதுகுறித்து துறை சார்ந்த  அலுவலர்களுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பள்ளி மற்றும் கல்லூரி நேரத்தில் பேருந் துகள் இயக்கப்படாததால், மாணவ மாணவியர்கள் உரிய நேரத்திற்கு பள்ளி களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. இந்நிலையில் வெள்ளியன்று முறையாக பேருந்துகளை இயக்கக் கோரி மாணவ, மாணவிகள் சாலை  மறியல் போராட்டம் நடத்தினர். போராட் டம் நடைபெற்ற பார்த்தசாரதிபுரத்திற்கு வந்த குமரலிங்கம் காவல் துறையி னர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாலை முதல் முறை யாக பள்ளி நேரத்தில் பேருந்துகள் இயங்கும் என்றும் உறுதியளித்துடன், தனியார் வாகனங்கள் ஏற்பாடு செய்து  உடனடியாக மாணவர்களை பள்ளிக்கு  அனுப்பி வைத்தனர்.