tamilnadu

img

வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூலை 18-  நாட்டில் மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில், தொடர்ந்து கல்வி நிலைய வளாகங்களில் மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் இருந்து மாணவர்களை காத்திட வலியுறுத்தியும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட கோரியும், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பாலின உணர்திறன் குழு (GSCASH) கல்லூரி நிறுவனங்களில் செயல்படுத்திட இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட துணைத் தலைவர் வீ.சந்தோஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைச் செயலாளர் விக்கி, கல்லூரி கிளைச் செயலாளர் ராகேஷ், கல்லூரி உறுப்பினர் அறிவழகன், கல்லூரி கிளை உறுப்பினர் ஹேமா உள்ளிட்டோர் மாணவர்கள் மீது நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.