tamilnadu

img

கல்லூரியில் பேராசிரியர் இல்லை ஆட்சியரிடம் மாணவர் சங்கம் மனு

கல்லூரியில் பேராசிரியர் இல்லை ஆட்சியரிடம் மாணவர் சங்கம் மனு

கோவை, ஜூலை 14 சிபிஎம் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரியில் போதிய பேராசிரியர்கள் இல்லாததால் மாண வர் கல்வி பாதிக்கப்படு வதாகவும், மாணவர் சேர்க்கை குறைவு மற்றும் கூடுதல் கட்டண  வசூல் ஆகியவற்றால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் மாணவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தினர் அளித்த மனுவில், கோவைப்புதூர் பகுதியில் சிபிஎம் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு கணிதத் துறையில் தற்போது துறைத் தலைவர் உட்பட இரண்டு பேராசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டபோது, புதிய பேராசிரியர்கள் நியமிக்கப்படுவதாக உறுதியளித்தனர். ஆனால், தற்போத வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மாணவர்களின் கல்வி தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த கல்வியாண்டில் கணிதத் துறையில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. நடப்பு கல்வியாண்டில் வெறும் இரண்டு மாணவிகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு மாணவியின் பெற்றோரை அழைத்து, “கல்லூரி அனுமதிக்கும் வரை வர வேண்டாம்” என முதல்வர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, தற்போது ஒரு மாணவி மட்டுமே கணிதத் துறையில் பயின்று வருகிறார்.  இதுதவிர, அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தாண்டி, ஹால் டிக்கெட் கட்டணம் போன்றவை மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. எனவே இந்தப் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணவும், கல்லூரியில் ஆய்வு நடத்தி மாணவர்களின் கல்வியைப் பாதுகாக்க வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு கொடுக்கும் நிகழ்வில், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அகமது ஜூல்ஃபிகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.