tamilnadu

மாணவி ராஜேஸ்வரி பாலியல் வன்புணர்வு - தற்கொலை வழக்கு

கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை, டிச. 3- மாணவி ராஜேஸ்வரி பாலியல்  வன்புணர்வு வழக்கை சிபிசிஐடிக்கு  மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. மனிதம் உரிமை அமைப்பு அந்த சம்பவம் தொடர்பாக முழுமை யான கள ஆய்வு நடத்தித் தயா ரித்துள்ள ஆய்வறிக்கையை சென் னையில் சனிக்கிழமை (டிச.3) வெளி யிட்டு கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் சிறுமிகள், பெண்  கள் மீதான பாலியல் வன்கொடுமை கள் நாளுக்கு நாள் அதிகரித்து  வருகின்றன. இதுபோன்ற சம்பவங்  களில் காவல்துறையின் நடவ டிக்கை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டம் மேற்கு தட்டு ஒன்றியம் கை.களத்தூர் என்ற கிராமத்தில்  ராஜேஸ்வரி (17) என்ற மாணவி பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்  பட்டு, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலையை தடுத்திருக்க முடியும்

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி ராஜேஸ்வரி கழிவறைக்குச் செல்லும் வழியில் அவருடைய பக்  கத்து வீட்டில் வசிக்கும் மணிகண் டன் என்பவர் மயக்க மருந்து தெளித்து ஆட்டோவில் கடத்திச் சென்று ஒரு குடோனில் அடைத்து வைத்து கட்டாயமாகத் தாலி கட்டி வன்புணர்வு செய்துள்ளார். அன்று இரவே மகளைக் காணவில்லை என அவரது தந்தை கை.களத்தூர்  காவல் நிலையத்தில் புகார் அளிக்கி றார். அப்போது காவல் நிலையத்தி லிருந்த காவலர்கள் இரவு ஆகி விட்டது காலையில் வந்து புகார்  அளியுங்கள் எனக் கூறி புகாரை வாங்க மறுத்துள்ளனர். இரவு 12 மணியானாலும் மாணவியைக் கடத்திச் சென்றது யார் என விசா ரணை நடத்தி இருந்தால் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுத்திருக்க முடியும். மீண்டும் காலையில் புகார் அளிக்கும் போது மாணவியின் தந்தை மணிகண்டன் என்பவர்தான் தனது மகளைக் கடத்தி இருக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளார்.  ரவிச்சந்திரன் என்ற காவல் துறை ஆய்வாளர் மணிகண்டனிடம் தொடர்பு கொண்டு கேட்கும் போது,  ஆமாம் அந்த மாணவியை நான் தான் அழைத்து வந்து கட்டாய திரு மணம் செய்து கொண்டேன் என்று  தெரிவித்துள்ளார். அப்போது காவல் துறையினர் அந்த பெண் ணுக்கு 17 வயதுதான் ஆகிறது, திரு மணம் செல்லாது, எனவே பெண்ணை  அழைத்துக் கொண்டு வா எனக் கூறி யுள்ளனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு மணிகண்டன் அந்த பெண்ணை அழைத்து வந்து காவல்  நிலையத்தில் ஒப்படைக்கிறார். அப்போது அந்த பெண் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். 

காவல்துறை அலட்சியம்

பெற்றோரை அழைத்து வெள்ளைப் பேப்பரில் கையெ ழுத்து பெற்றுக் கொண்டு அவர்களி டம் மகளை ஒப்படைத்துள்ளனர். ஆனால் மைனர் பெண்ணை கடத்தி கட்டாயத் திருமணம் செய்து, வன்  புணர்வு செய்தது குறித்தோ காவல்  துறையினர் வழக்குப் பதிவு செய்ய வில்லை. ஆனால் அன்றே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனையும், அதற்கு உடந்தையாக இருந்த ரவிச்சந்திரனையும் கைது செய்தி ருந்தால் அந்த பெண்ணின் தற் கொலையைத் தடுத்திருக்க முடி யும்.  மணிகண்டன் மற்றும் அவரது  நண்பர்கள் அந்த பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். மேலும் அந்த பெண்ணை ஆபா சமாகப் படம் எடுத்து வைத்துக் கொண்டு எங்களிடம் வர வேண்டும் என்றும், இல்லையென்றால் உங்  கள் குடும்பமே தற்கொலை செய்து  கொள்ளும் அளவிற்கு இந்த ஆபாசப் படத்தை வெளியிடுவோம், உறவினர்களுக்கு அனுப்பி வைப்போம் என மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த பெண் அக்டோ பர் மாதம் 25ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்  ளார். அதன்பிறகு 28ஆம் தேதி தற்கொலை முயற்சி என வழக்குப் பதியப்படுகிறது. 

தலையீடுக்கு பிறகே எப்.ஐ.ஆர்

காவல்துறையினர் சிலர் அந்த  பெண்ணின் சகோதரியிடம் தகாத வார்த்தையில் கேள்வி கேட்டுள்ள னர். சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்  53 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பல னின்றி இறந்து போகிறார். அதன் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்திய பிறகும், காவல்துறை கண்  காணிப்பாளர் தலையிட்ட பிறகும் தான் முதல் தகவல் அறிக்கை மாற்றி அமைக்கப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதி யப்படுகிறது.

காவல்துறை அதிகாரிகளே பொறுப்பு 

ஆகஸ்ட் 31ஆம் தேதி சம்பவம்  நடந்த உடனே உரிய முறையில் குழந்தை திருமணம், கடத்தல், பாலி யல் வன்புணர்வு உள்ளிட்ட சட்டங்க ளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த மாணவியின் தற்கொலையைத் தடுத் திருக்க முடியும். அந்த மாணவியின் சாவுக்கு முழு பொறுப்பு கை.களத்தூர் காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் தான். காவல் துறையின் மெத்தனப் போக்கால் இதுபோன்ற பல உயிரி ழப்புகள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கடமை தவறிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அலட்சியமாக நடந்து கொண்ட காவல் துறையினரே மீண்டும் இந்த வழக்கை விசா ரித்தால் அது முறையாக இருக்காது. எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரண மும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

ஐஜியின் முன் முயற்சி

தமிழக அரசு இதுபோன்ற சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நடை பெறும் போது, உடனடியாக காவல் துறையினர் உரிய விசாரணை நடத்திச் சம்பந்தப்பட்ட குற்றவாளி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஆதரவாக காவல்துறை துணை நிற்பதற்கு மாறாகக் குற்றவா ளிகளுக்கு ஆதரவாகத் துணை நிற்ப தால் தான் இதுபோன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறு கின்றன. அனைத்து காவல் துறை யினர் மீதும் குற்றம் சுமத்தவில்லை. தென் மாவட்ட மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற பாலியல் வன் கொடுமை குறித்த வழக்குகளைத் தேடி எடுத்து, அந்த வழக்கில் பாதிக் கப்பட்ட பெண்களுக்கு, சிறுமிக ளுக்கு, பெற்றோர்களுக்கு காவல் துறை எப்படி பக்கபலமாக இருக்க வேண்டும், சட்டப்படி என்ன உதவி செய்ய வேண்டும் என வழிகாட்டி யுள்ளார். தமிழகம் முழுவதும் இது போன்ற நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொள்ள வேண்டும். கூடுதல் கவனம் செலுத்துக இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது அந்த குடும்பமே உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படு கின்றனர். குற்றத்திற்கு ஆளான வரைக் குற்றவாளிகள்போல் பார்க்கும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசும், காவல்துறையும் குற்றவாளிகள் எளிதில் ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பது ஒட்டு மொத்த சமூகத்திற்கே அவலம், அவமானம். இந்த ஆய்வறிக்கை முதலமைச்சருக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார். எனவே தமிழக முதலமைச்சர் இதுபோன்ற பாலியல் வன்முறைச் சம்பவ வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்து, போக்சோ சட்டம் குறித்துக் காவல் துறையினருக்கு போதிய விழிப்பு ணர்வு இல்லையா என்ற கேள்விக்கு, போக்சோ போன்ற புதிதாகச் சட்டங்கள் இயற்றப்படும்போதோ, அல்லது சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்போதோ அது குறித்த உரிய பயிற்சி காவல் துறை யினருக்கு அளிக்க வேண்டிய தேவை உள்ளது என்றார். மகளிர் ஆணையம் முழுமை யாகச் செயல்படவில்லையா என்ற கேள்விக்கு, அப்படிக் கூற முடியாது. மாநில மகளிர் ஆணை யத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, தேவையான ஊழியர் களை நியமிக்க வேண்டும். சம்பவம் நடைபெறும் அனைத்து இடங்களுக்கும் அந்த ஆணையம், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உரிய பரிந்துரையை வழங்க வேண்டும் என்றார். இச்சந்திப்பின் போது மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மனிதம் அமைப்பின் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.ராஜேந்திரன், ஆர்.திருமூர்த்தி, எம்.ஜெ.லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

;