tamilnadu

img

மாணவர் சங்கம் வரலாற்று வெற்றி

கண்ணூர், ஜன.29- கண்ணூர் பல்கலைக்கழக கல்லூரி யூனியன் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் வரலாற்று வெற்றி பெற்றது. காசர்கோடு, கண்ணூர், வயநாடு மாவட் டங்களில் அமைப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 64 கல்லூரிகளில் 53இல் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. கண்ணூர் மாவட்டத்தில் 46 கல்லூரி களில் 38 கல்லூரிகளிலும், காசர்கோட் டில் 15 கல்லூரிகளில் 12 கல்லூரிகளி லும், வயநாடு மாவட்டத்தில் 3 கல்லூரி களிலும் எஸ்எப்ஐ வெற்றிக் கொடி நாட்டியது. 32 கல்லூரிகளில் போட்டி யின்றி வெற்றி பெற்றது. கண்ணூர் 51, காசர்கோடு 15 மற்றும் வயநாடு 4 ஆகிய இடங்களில் 70 பல்கலைக் கழக யூனியன் கவுன்சிலர் பதவிகளை யும் எஸ்எப்ஐ வென்றுள்ளது.

மற்ற வர்களுக்கு 13 கவுன்சிலர்கள் மட்டுமே கிடைத்துள்ளது. கேஎஸ்யுவின் கூத்துபரம்பு நிர்மல கிரி, இரிட்டி எம்ஜி, அங்காடிக்கடவு டான் போஸ்கோ, செண்டையாடு எம்ஜி கல்லூரி மற்றும் கேஎஸ்யு-எம்எஸ்ஒப் கோட்டையான இருக்கூர் சிப்கா கல்லூரி ஆகியவற்றை எஸ்எப்ஐ கைப்பற்றியது. டான் போஸ்கோவில் எஸ்எப்ஐ ஆதிக்கம் செலுத்துவது இதுவே முதல்முறை. கண்ணூர் கிருஷ்ண மேனன் நினைவு அரசு மகளிர் கல்லூரி, கண் ணூர் எஸ்.என்., பையனூர், மாடாயி கல்லூரிகளில் அனைத்து இடங்களி லும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது.

தலச்சேரி அரசு பிரண்ணன் கல்லூரி, எடத்தொட்டி டி பால், வீர்பாட் எஸ்என்ஜி, எஸ்என்ஜி தோட்டா ஆகிய இடங்களி லும் எஸ்எப்ஐ வலுவை நிரூபித்துள் ளது. காசர்கோடு பெரிய அம்பேத்கர் கல்லூரியில் கே.எஸ்.யு-எம்.எஸ்.எப் கூட்டணியை தோற்கடித்து, அனைத்து இடங்களையும் எஸ்எப்ஐ வென்றது. கும்பளா ஐஎச்ஆர்டி கல்லூரி யூனி யனை ஏபிவிபியிடம் இருந்து கைப்பற் றியது. காஞ்ஞங்காடு நேரு கல்லூரி, உதுமா அரசு கல்லூரி, மூன்னாடு பீப் பிள்ஸ், எஸ்.என்.பெரியா, சி.கே.நாயர் கல்லூரி ஆகியவற்றில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எளேரித்தட்டு ஈ.கே.நாயனார் நினைவு அரசுக் கல்லூரி, கரிந்தளம் அரசுக் கல்லூரி, காளிச்சனடுக்கம் எஸ்என் டிபி, பள்ளிப்பாறை ஐஎச்ஆர்டி, மடிகை ஐஎச்ஆர்டி ஆகிய கல்லூரிகளில் அனைத்து இடங்களிலும் எஸ்எப்ஐ போட்டியின்றி வெற்றி பெற்றது. வய நாடு மாவட்டத்தில் தேர்தல் நடந்த மானந்தவாடி அரசுக் கல்லூரி, பிகே காளன் கல்லூரி, மானந்தவாடி மேரி மாதா கல்லூரி ஆகியவற்றில் அனைத்து இடங்களிலும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. ஒரு சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் பின் னர் தேர்தல் நடத்தப்படும்.