tamilnadu

img

மின்வாரியத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை கோரி போராட்டம்

சென்னை, மார்ச் 4 - தொழில் பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சி முடித்தவ ர்களுக்கு, பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க கோரி வியாழ னன்று (மார்ச் 3) மின்வாரிய தலை மையகம் முன்புஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பிஇ பயின்று,மின் வாரியத்தில் அப்ரண்டிஸ் முடித்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களுக்கு பணி நியம னங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும். அப்ரண்டிஸ் சட்டத் திருத்தத் தின்படி ஒரு நிறுவனத்தில் பயிற்சி முடித்தவர்களை பணி நியமனம் செய்துகொள்ள அந்தந்த நிறுவ னங்களே கொள்கை முடிவு எடுக்க லாம் என்று உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அதை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. மின்சார வாரியத்தில் தொழிற் பயிற்சி முடித்தோர் நலச்சங்கத் தின் தலைவர் எஸ்.எம்.காத்தி கேயன் தலைமையில் நடை பெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் தி.ஜெய்சங் கர், பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.நந்த குமார், பொருளாளர் எஸ்.ரேணுகா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் மஞ்சுளா உள்ளிட்டோர் பேசினர்.