tamilnadu

கோவில் நிலத்தில் குடியிருப்போருக்கு நோட்டீஸ்: அதிகாரிகளுக்கு வலுக்கும் கண்டனம்

சென்னை,ஜன.17- கோவில் நிலத்தில் குடியிருப் போருக்கு வாடகை நிர்ணயம் செய்ய  குழு அமைத்து விட்டு, மறுபுறம் வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன் படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில அமைப்பாளர் சாமி.நடரா ஜன் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:- தமிழ்நாடு முழுவதும் அறநிலை யத் துறைக்கு சொந்தமான கோயில் இடங்களில் பல தலைமுறைகளாக அடிமனைகளில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகள், சிறு கடை வைத்திருப்போர்களின் கோரி க்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.  இதன் விளைவாக, கடந்த அதி முக ஆட்சியில் கோயில் இடங்களில் நீண்ட காலமாக குடியிருப்பவ ர்களுக்கு பட்டா வழங்க அரசாணை  318 வெளியிடப்பட்டது.

இதன் மூலம் 600 ஏக்கரை அரசே உரிய தொகையை சம்பந்தப்பட்ட கோயில்  பெயரில் வங்கியில் செலுத்திவிட்டு சுமார் 18 ஆயிரம் ஏழைகளுக்கு பட்டா வழங்கிட அரசு முடிவெடு த்தது. இதை எதிர்த்து சங்பரிவார அமைப்புகளின் ஆதரவாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் நீதி மன்றம் மூலம் இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளார். இந்த தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அரசும், பயனாளிகள் சார்பிலும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறை யின் உயரதிகாரிகளையும் சந்தித்தும்  பல முறை கடிதங்கள் மூலமும்  கோரிக்கைகளை முன்வைத்து ள்ளோம். தற்போது அரசு புதிய வாடகை நிர்ணயம் செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்துள்ளதை வரவேற்கிறோம். இந்த குழுவில் பயனாளிகள் சார்பிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒருவர் கூட  இடம்பெறாமல் உள்ளது ஏற்புடையதில்லை. எனவே பயனாளிகள் பிரதிநிதிகளும், தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும். வாடகை நிர்ணயம் செய்ய  குழு அமைத்த பின்பு தற்போது தமிழகம் முழுவதும் அறநிலையத் துறை அதிகாரிகள் பயனாளிகளை அச்சுறுத்தும் வகையில் உயர்த்தப் பட்ட வாடகை பாக்கி என்று ஒவ்வொரு வருக்கும் பல லட்சம் கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பு கின்றனர். உதாரணமாக, தேனி மாவட்டம்  கம்பம் நகரில் உள்ள கம்பராய பெரு மாள் மற்றும் காசி விஸ்வநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான அடி மனையில் ஒருவர் 864 சதுரடியில் வீடுகட்டி குடியிருந்து வருகிறார்.

அவர் தற்போது வரை மாத வாடகை ரூ. 636 நிலுவையில்லாமல் செலுத்தி வருகிறார். அவருக்கு தற்போது மாத வாடகை 8870 ரூபாய் என்றும் வாடகை பாக்கி ரூ. 5,36,700 என்றும், நோட்டீஸ் கிடைத்த 15  தினங்களில் மொத்தமாக கட்ட வேண்டும் இல்லையெனில் வீட்டை விட்டு வெளியேற்றுவோம் என்று  அறிவிக்கின்றனர். இதுபோல் தமிழ்நாடு முழுவதும் பயனாளி களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படு கிறது.  ஒருபுறம் வாடகை நிர்ணயம் செய்ய குழு அமைத்து விட்டு, கூடி எந்த முடிவும் எடுக்காத நிலையில் மறுபுறம் வெளியேற்ற நோட்டீஸ் அனுப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம். புதிய வாடகை நிர்ணயம் செய்யும் வரை ஏற்க னவே பயனாளிகள் செலுத்திய வாட கையே வசூலித்திடுவதற்கு அரசு உத்தரவிட வேண்டுகிறோம். மேலும் கடந்த ஆறு மாத  காலத்தில் செல்வாக்கு படைத்த வர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இடங்களை மீட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் சாதாரண ஏழை,எளிய, நடுத்தரப்பகுதி மக்கள் பயன்படுத் திவரும் இடங்களையும் ஒன்றாக ஒப்பீடு செய்து பார்க்கும் நிலையை அதிகாரிகள் கைவிடவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.

;