நெல்லை அடைமிதிப்பான்குளத்தில் விபத்து நடந்த கல்குவாரியின் உரிமையாளர் சேம்பர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். கர்நாடக மாநிலம் மங்களூரில் லாட்ஜில் தங்கியிருந்த இருவரையும் நெல்லை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சனிக்கிழமை நெல்லைக்கு அழைத்துவரப்பட உள்ளனர்.