tamilnadu

img

தியாகி லட்சுமண ஐயருக்கு சிலை முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் 1918 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜி. எஸ். லட்சுமண அய்யர். இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூகச் சேவகரும் மற்றும் சாதிய பாகுபாடு எதிர்ப்பாளரும் ஆவார். இவர் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிப்பாளையத்தில் 1918ஆம் ஆண்டில் பிறந்தார்.

தீண்டாமை ஒழிப்பும் - சமபந்தி விருந்தும்

சிறந்த மருத்துவரான இவர் பிறப் பால் ‘உயர்சாதி’ எனப்பட்ட சமூகத்தில் பிறந்தாலும் தனது வாழ்நாள் முழுவதும் பட்டியலின பழங்குடி மக்களுக்காக குரல் கொடுத்தவர்.1928ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை காந்தியடிகள் அறிவித்த போது அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.  அவரது பகுதியிலிருந்து ஆதிதிரா விட மக்களை அழைத்து சமபந்தி விருந்து நடத்தினார். அவரது வீட்டுக் கிணற்றிலிருந்து அனைத்து தரப்பு மக்களையும் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதித்தார். இதனால் இவருடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களால் ஒதுக்கி  வைக்கப்பட்டார். லட்சுமண அய்யரின் சகோதரியான ஆனந்தி லட்சுமியை யும், அவரது புகுந்த வீட்டினர் பிறந்த வீட்டிற்கே திருப்பி அனுப்பி வைத்துவிட்ட னர். 

மனித கழிவுகளை அகற்றும் நிலையை தடை செய்தவர்!

இவர் 1952-1955 மற்றும் 1986- 1991 ஆகிய ஆண்டுகளில், கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி தலைவராக இருந்தபோது நகராட்சி யில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை தடை செய்தார். இந்தியாவிலேயே இந்தத் திட்டம் கோபிச்செட்டிபாளையம் நகராட்சியில் தான் முதன் முதலில் கொண்டு வரப்பட்டது.

சிறைவாசம்! 

திருமணத்திற்குப் பின்னர் லட்சு மண ஐயர் தமது மனைவி லட்சுமியை யும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தார். சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரால் சிறையில் அடைக்கப்பட்டனர். தனது இறுதி மூச்சு வரைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஏழை மக்க ளுக்கும் மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை செய்த தியாகி லட்சுமண ஐயர், 2011 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் கால மானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கோபியில்  கடை கள், தொழில், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. சுதந்திரப் போராட்ட தியாகி - மக்கள் போற்றும் தலைவர் லட்சுமண ஐயருக்கு அரசு சார்பில் சிலை அமைக்க வேண்டும் என்று இடதுசாரிகளும், தீண் டாமை ஒழிப்பு முன்னணியும் தொட ர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. இந்நிலையில், சிலை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை யில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப் பினரான இ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.  இதற்கு பதிலளித்த அமைச்சர் சாமி நாதன்,” நானும் அந்தப் பகுதியைச் சார்ந்தவன் என்பதால் லட்சுமண ஐய ரின் தியாகங்கள், மருத்துவ சேவையை நன்கு அறிந்தவன். எனவே சிலை அமைப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும்”என்றார். கோபிச்செட்டிபாளையம் பகுதியின் மக்கள் தலைவரான சுதந்திரப் போராட்ட தியாகி மருத்துவர் லட்சுமண ஐயர் அவர் களுக்கு சிலை அமைக்க வேண்டிய தன் அவசியம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலை வர் நாகைமாலி ஏற்கனவே பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்திருந்தார்; இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தொகுதி மக்களவை உறுப்பினர் சுப்பராயனும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

;