சுமைப்பணி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் நிறுவனங்கள் தமிழக அரசு தடுக்க கோரி ஜூலை 21-இல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 13 - சிஐடியு தமிழ்நாடு சுமைப் பணி தொழிலாளர் சம்மேளன மாநில குழுக் கூட்டம், சிஐடியு திருச்சி மாவட்ட அலுவலகத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. கூட்டத்திற்கு சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமை வகித்தார். திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ். ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, சம்மேளன மாநில சிறப்பு தலைவர் எஸ்.குணசேகரன், சம்மே ளன மாநில பொதுச் செயலாளர் இரா.அருள் குமார், சம்மேளன மாநிலப் பொருளாளர் பி.குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருச்சியில் நடைபெற உள்ள மாநில மாநாட்டு லோகோவை சிஐடியு மாநிலச் செயலாளர் சி. திருவேட்டை வெளியிட, அதனை சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ். ரெங்கராஜன் பெற்றுக் கொண்டார். திருச்சி, மதுரை புறநகர் உள்ளிட்ட சில மாவட்டங் களில் பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் சுமைப்பணி தொழிலாளர்களை சட்டத்திற்கு புறம்பாகவும், தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை பறிக்கும் வகையிலும் சில நிறுவனங்கள், வேலை உரிமையை பறிப்பதற்கு ஆதரவாக நீதி மன்றமும், காவல்துறையும் செயல்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஜூலை 21 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது. தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில மாநாட்டை செப்டம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடத்துவது. செப்.22 அன்று மாலை நடைபெறும் பேரணி, பொதுக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுமைப்பணி தொழிலா ளர்கள் பங்கேற்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சம்மேளன மாநில துணைத் தலைவர்கள் அ.பிச்சைமுத்து, த.முருகேசன், எம். அர்தநாரி, ஆர்.ராஜன், அ.சுடலைகாசி, சம்மேளன மாநில துணைச் செயலாளர்கள் அ.கோவிந்தன், ஆர்.பாண்டி, எம்.எஸ். பீர்முகமது மற்றும் சம்மேளன மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். முன்னதாக சம்மேளன துணைச் செயலாளர் ஆர்.சிவகுமார் வரவேற்றார். சம்மேளனக்குழு உறுப்பினர் வி.மூர்த்தி நன்றி கூறினார்.