tamilnadu

img

தேசிய ஹாக்கி போட்டிக்கான மாநில அணி தேர்வு

புதுக்கோட்டை, அக்.13 - இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் சார்பில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக, தமிழக மாணவிகள் ஹாக்கி அணித் தெரிவுப் போட்டி புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம் தொடங்கி வைத்தார். 38 மாவட்டங்களைச் சேர்ந்த 88 ஹாக்கி வீராங்கனைகள் பங்கேற்றனர். தேர்வின் முடிவில் தமிழக மாணவிகள் அணிக்கு 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 4 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள். இந்தத் தெரிவுப் போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆர்.தங்கராஜ், பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.