tamilnadu

img

கேலோ இந்தியா சார்பில் மாநில அளவிலான கராத்தே

கேலோ இந்தியா சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டியில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒக்கினாவா சோஜென்றியூ மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் 11 பேர் தங்கப் பதக்கமும், 8 பேர் வெள்ளிப் பதக்கமும், 4 பேர் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை இந்திய தலைமை பயிற்சியாளர் ரென்ஷி ஜெயராஜ், செயலாளர் புரூஸ்லின், இந்தியன் வங்கி ஊழியர் சண்முக சுந்தரி, பயிற்சியாளர் மணிகண்டன், கராத்தே ஆலோசகர் மகேந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.