முதலமைச்சர் கோப்பைக்கான மாநில ஹாக்கி போட்டி துவங்கியது
தூத்துக்குடி, அக். 4- கோவில்பட்டியில் மாநில அளவி லான முதலமைச்சர் கோப்பைக் கான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை தமிழக சமூக நலம்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் துவக்கி வைத்தார். விழாவில் அமைச்சர் கூறுகை யில், கோவில்பட்டி ஹாக்கி விளை யாட்டில் சிறந்து விளங்குகின்ற பகுதியாகும். கோவில்பட்டியை ஹாக்கிபட்டி என்று அழைக்கப்படும் நகரமாகும். நமது பகுதியைச் சார்ந்த மாரீஸ்வரன் இந்திய அணி யில் விளையாடிக் கொண்டிருக் கின்றார். இந்த மைதானமும் விளையாட்டு வீரர்களின் வசதிக்கேற்ப நல்ல முறையில் பரா மரிக்கப்பட்டு வருகிறது. இங்கு வருகை தந்துள்ள அனைத்து வீரர்களும் உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமை வகித்தார். கோவில்பட்டி சார் ஆட்சி யர் ஹிமான்ஷீ மங்கள், கோவில் பட்டி நகரமன்ற தலைவர் கருணா நிதி, உடற்பயிற்சி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், பல்வேறு மாவட்டங்க ளின் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
