சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனே துவங்குக!
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட மாநாடு கோரிக்கை
நாகப்பட்டினம், ஆக.13 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகப் பட்டினம் மாவட்ட 5 ஆவது மாநாடு புதனன்று கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் மாவட்டத் தலைவர் ஜீ. வினோத்ராமலிங்கம் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலை வர் கே.சித்தார்த்தன் வரவேற் புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் டி.லதா அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். மாநில துணைச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் துவக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் ப. சுபாஷ்சந்திரபோஸ் வேலை அறிக் கையை சமர்ப்பித்தார். சிறுபான்மை நலக்குழு தலைவர் எம்.அப்துல்அஜீஸ், சிபிஎம் கீழையூர் மேற்கு ஒன்றியச் செய லாளர் டி.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாதி ஆணவப் படுகொலை களுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை உறுதிப்படுத்த வேண்டும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனே துவக்க வேண் டும். தனியார் துறையில் இட ஒதுக் கீட்டை அமல்படுத்த வேண்டும். தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாவட்டத் தலைவராக அ.தி.அன்ப ழகன், துணைத் தலைவர்களாக ப. சுபாஷ்சந்திரபோஸ், கே.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளராக ஏ.ராஜா, இணைச் செயலாளர்களாக டி.லதா, ஏ.சிவக்குமார், மாவட்டப் பொருளா ளராக ஜீ.வினோத்ராமலிங்கம் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இரண்டு இளம் தம்பதிகளை வாழ்த்தி முன்னாள் மாநில துணைத் தலைவரும், கீழ்வேளூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வி.பி.நாகை மாலி பாராட்டுரை வழங்கினார். மாவட்டத் தலைவர் அ.தி.அன்பழகன் நன்றி உரையாற்றினார்.