பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்’’ சிறப்பு திட்ட முகாம்
பொன்னமராவதி, ஜூலை 17- பொன்னமராவதியில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ஒன்று முதல் 9 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது முகாமை பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் வட்டாட்சியர் சாந்தா ஆகியோர் துவக்கி வைத்தனர் பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை துணைத் தலைவர் வெங்கடேஷ் பங்கேற்றனர் நூற்றுக்கணக்கான பெண்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.