tamilnadu

img

பெருமகளூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பெருமகளூர் பேரூராட்சியில்  உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தஞ்சாவூர், செப். 24-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருமகளூர் பேரூராட்சி 7 முதல் 12 ஆவது வார்டு வரையிலான பொதுமக்கள் பயன்பெறும் வகையில், “உங்களுடன் ஸ்டாலின்’’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.  பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, அரசுத் திட்டங்கள் குறித்து உரையாற்றி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.  முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு அடையாள அட்டையை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார். மேலும், டாக்டர் ரேவதி தலைமையிலான மருத்துவக் குழுவினர், பயனாளிகளை பரிசோதித்து மருத்துவ ஆலோசனை வழங்கினர்.