tamilnadu

அடுத்தாண்டு விண்ணில் பாயும் எஸ்எஸ்எல்வி

புதுதில்லி, டிச.16- இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கி வரும் எஸ்எஸ்எல்வி அடுத்தாண்டு தொடக்கத்தில் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரோ தயாரித்து வரும் செயற்கைக்கோள் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வ பதிலளித்தார். அதில், தனியார் பங்களிப்புடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தயாரித்து வரும் செயற்கைக்கோளை ஏவும் எஸ்எஸ்எல்வி திட்டமானது அடுத்தாண்டு நிறைவு பெற்று முதல் காலாண்டில் விண்ணில் செலுத்தப்படும்.சுமார் 500 கிலோ  எடையை சுமக்கும் திறன் கொண்ட இந்த எஸ்எஸ்எல்வி திட்டத்திற் காக ரூ. 169 கோடி ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.