மலையகத் தமிழர்களுக்கு பட்டா! இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வழங்கினார்
கொழும்பு, அக். 14 - இலங்கையில், மலையகத் தமிழ் மக்களுக்கு இந்திய உதவி யுடன் வீடு கட்டி கொடுக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 1,300 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு மேலும் 2,056 வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான நில உரிமைப் பத்திரங்களை (பட்டா) இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வழங்கினார். பிரிட்டிஷ் ஆட்சியில், 19-ஆம் நூற்றாண்டின் போது, தமிழ்நாட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். வீடு, நில உரிமை மற்றும் அடிப்படை வசதி கள் அவர்களின் நூற்றாண்டு கால கோரிக்கை ஆகும். இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சி களும் தேர்தல் நேரத்தில் மலையக மக்களுக்கான வாக்குறுதிகளை வழங்குவார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்ததற்குப் பின், அதில் கவனம் செலுத்த மாட்டார்கள். கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரி கட்சித் தலைவரான அனுர குமார திஸாநாயக்க, தமது தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால், மலையக மக்களின் பழைய வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும்; பள்ளி, கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படு வார்கள்; சுகாதார வசதிகளை செய்து கொடுக்கப்படும்; ஊதியக் குறைவு பிரச்சனைக்கு தீர்வு காணப் படும் என்ற வாக்குறுதிகளை அளித் திருந்தார். அந்த வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றவும் துவங்கி யுள்ளார். மலையகப் பகுதியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் நிலையில், இந்திய வீட மைப்பு திட்டத்தின் கீழ், 1,300 வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 30 வீடுகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளை விரைந்து கட்டுவதற்கு நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்தப் பணிகளும் விரைவில் முடியும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது. இதனிடையே, இந்திய - இலங்கை வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 2,056 வீடுகளுக்கான நில உரிமைப் பத்திரம் (பட்டா) வழங்கும் நிகழ்வு, அக்டோபர் 12 அன்று பண்டாரவளை பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்று, மலையகத் தமிழ் மக்க ளுக்கு பட்டாக்களை வழங்கினார். மலையக மக்கள் மிகுந்த மகிழ்ச்சி யுடனும், கண்ணீர் மல்கவும் பட்டா பெற்றுக் கொண்டனர். பட்டா பெற்றவர்களுக்கு வீடு கட்டும் பணி இந்தாண்டின் இறு திக்குள் தொடங்கும் என்பதுடன், மேலும் 2,700 வீடுகளுக்கான பட்டாக்களும் விரைவில் வழ ங்கப்படும், 4,700 வீடுகள் கட்டும் பணிகளையும் வேகமாக முடித்து அந்த வீடுகளையும் மக்களுக்கு விரைந்து ஒப்படைப்போம் என்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
