tamilnadu

img

எர்ணாகுளம்- வேளாங்கண்ணி  இடையே சிறப்பு ரயில்

மதுரை:
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு கட்டணசிறப்பு ரயில் இயக்கப்படு கிறது. இந்த ரயில் எர்ணாகுளம் ரயில் நிலையத்தி லிருந்து ஜூலை 17,  24, 31, ஆகஸ்ட், 7, 14, 21, 28, ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடை யும்.   மறு மார்க்கத்தில்  வேளாங்கண்ணி - எர்ணா குளம் சிறப்பு கட்டண ரயில் வேளாங்கண்ணி ரயில் நிலையத்திலிருந்து ஜூலை 18, 25,ஆகஸ்ட் 1, 8, 15, 22, 29ஆகிய தேதிகளில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.ரயில் நிற்கும் இடங்கள்திருப்பணித்துர, கோட்ட யம், சங்கனாச்சேரி, திரு வல்லா, செங்கனூர், மா வேலிக்கரா, காயங்குளம், குந்திரா, கொட்டாரக்கரா, ஆவணி ஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, இராஜபாளை யம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானா மதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு வியாழனன்று தொடங்கிவிட்டது.

;