தூத்துக்குடி, ஜூன் 1- வடமாநில தொழிலாளர்கள் செல்வதற்காக தூத்துக்குடியி லிருந்து இன்றும் (திங்கள்) நாளையும் (செவ்வாய்) சிறப்பு ரயில் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி தெரி வித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி திங்க ளன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறும் போது, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவ மனையிலிருந்து தினசரி ஏராளமானோர் குணமடைந்து வீடுகளுக்கு செல்கின்றனர். குஜராத்,மஹாராஷ்டிரா, மற்றும் வெளியூர்களிலிருந்து வந்த நபர்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளியூரிலிருந்து வருபவர்க ளை 15 சோதனை சாவடிகளில் சோதனை செய்து கொரோனா அறிகுறி இருந்தால் தனிமைப் படுத்தும் முகாம்களுக்கு அனுப்பபடுவார்கள்.
தமிழக முதலமைச்சர் உத்தர வின்படி தூத்துக்குடி திருநெல் வேலி உள்ளிட்ட 4 மண்டலங்க ளுக்கான பேருந்து போக்கு வரத்து இன்று (திங்கள்) முதல் தொடங்கப்பட்டுள்ளது. நாளை (ஜுன் 2 ஆம் தேதி) இலங்கையி லிருந்து ஒரு பயணிகள் கப்பல் தூத்துக்குடி வந்தடையும். அதில் 700 பயணிகள் இருப்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. அவர்கள் இங்கு வந்தவுடன் முறையாக பரிசோதனை செய்து, அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இன்று(திங்கள்) மாலை 5 மணிக்கு வடமாநில தொழி லாளர்களுக்காக தூத்துக்குடியி லிருந்து பீகாருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை (செவ்வாயன்று) மேற்கு வங்கம் செல்பவர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தற்போது வரை 3 ஆயிரம் வட மாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 1500 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.