6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்
சென்னை: குழந்தைகள் போலியோ வைரஸ் நோயால் பாதிக்கப்படாமல் இருக்க நாடு முழுவதும் அவ்வப்போது போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல் பட்டு, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்றது. அதன்படி, 5 வயதுக்குட்பட்ட 1,85,286 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தஞ்சை மாவட் டத்தில் நடைபெற்றது. இதற்காக நகரப் பகுதிகளில் 128, ஊரகப் பகுதிகளில் 1481 என மொத்தம் 1609 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களில் 5819 பணியாளர்கள், 178 மேற்பார்வையர்கள் பணிபுரிந்தனர். இதேபோல் மற்ற ஐந்து மாவட்டங்களிலும் சுகாதாரப் பணி யாளர்கள் சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்ட னர். மாவட்டத்தில் சுகாதார நிலையங்கள், பள்ளிகள், மருத்து வமனை, பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், கோவில் கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகின்றன.
53 கிலோ கோவில் நகைகள் ஸ்டேட் வங்கியில் முதலீடு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் நவ ராத்திரி மண்டபத்தில் கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத பல மாற்று பொன் இனங்களை ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி மோகன் தலைமை வகித்தார். எம்.பி., க. செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகா லட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி, கோவில் நகை சரிபார்ப்பு குழு இணை ஆணையர் வான்மதி, இணை ஆணையர் பழனி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, 53 கிலோ 350 கிராம் எடையுள்ள பயன்பாட்டில் இல்லாத பல மாற்றுப் பொன்னினங்களை ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் செந்தில்நாதனிடம் ஒப்படைத்தார். காஞ்சி புரம் காமாட்சி அம்மன் கோவில், திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில், குன்றத்தூர் சுப்பிர மணியசாமி கோவில் உள்ளிட்ட கோவில் நகைகள் 53.350 கிராம் ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
2.36 லட்சம் பேர் எழுதினர் சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் ஆட்களை நிரப்ப, அக்.12 அன்று போட்டி தேர்வு நடைபெற்றது. திட்டமிட்டபடி தேர்வு நடை பெறும் என்று நீதிமன்றத்தில் தேர்வு வாரியம் அறிவித்த தன்படி, தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக் கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வுக்காக தமிழ கம் முழுவதும் 809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்வை 2.36 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.
ரூ.300 கோடி ஒதுக்கீடு
சென்னை: கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் ரேசன் கடைகளுக்கு 2025-26 நிதியாண்டிற்கான மானிய முன்பண மாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் 33 ஆயிரம் ரேசன் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வரு கின்றன. ரேசன் கடை வாடகை, மின் கட்டணம், ஊழியர் களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தர்மபுரி: வடகிழக்குப் பருவமழை தொடங்குவதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்ப தால், பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் 2 ஆவது நாளாக தடை விதித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சனிக்கிழமை தொலை பேசி மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப் பட்டது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துப் பேசிய மர்ம நபர் முதலமைச்சரின் வீட்டில் குண்டு வைத்தி ருப்பதாக தெரிவித்து விட்டு போனை துண்டித் துவிட்டார். இது தொடர் பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆராய்ந்ததில், திருப்போரூரைச் சேர்ந்த ஐயப்பன் என்ற வாலிபர் சிக்கினார். மாற்றுத் திற னாளியான இவர் இது போன்று ஏற்கனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.
காத்திருப்பு நேரம் குறைப்பு
சென்னை: தமிழ்நாட் டில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் காத்திருப்பு நேரம் சராசரியாக 7.57 நிமிடங்களாக குறைக்கப் பட்டுள்ளது. சென்னை யில் 108 ஆம்புலன்ஸ்களுக் கான காத்திருப்பு நேரம் 5 நிமிடங்களாக உள்ளன. செங்கல்பட்டு, கடலூரில் 7 நிமிடங்களாக வும், பிற மாவட்டங்களில் காத்திருப்பு நேரம் 8 நிமி டங்களாகவும் உள்ளது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.