tamilnadu

img

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

சென்னை, மே 31- தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் தென்மேற்கு பருவ  மழை தொடங்கி உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இது குறித்து இயக்குநர் செந்தா மரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி  குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை பரவி உள்ளது. இதன் காரணமாக ஜூன் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி  வரைக்கும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான  மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்க ளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்கள் தென் கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று, தென் மேற்கு திசையில் இருந்து  மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு  செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.