tamilnadu

சோனம் வாங்சுக் கைது; சிபிஎம் கண்டனம்!

சோனம் வாங்சுக் கைது; சிபிஎம் கண்டனம்!

புதுதில்லி, செப். 27 - லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்று வந்த போராட்டத்தில் முன்னணியிலிருந்த சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள

அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதா?

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; அதனை அரசியலமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ்  இணைத்திட வேண்டும் என வலி யுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தில் முன்னணியில் நின்று செயல்பட்டுவரும் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டிருப்ப தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. அவரை மிகவும் கொடுங்கோன்மை மிக்க தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பது, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கத்தின் எதேச்சதிகார குணத்தையும், லடாக் மக்களின் நியாயமான அபிலாசைகளையும் கூட அவமதித்திடும் தன்மையையும் தோலுரித்துக் காட்டுகிறது

. லடாக் மக்களை மேலும் அந்நியப்படுத்தக் கூடாது

லடாக் மக்களுக்கு அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அங்குள்ள ஜனநாயக இயக்கத்தை நசுக்க அரசாங்கம் அடக்குமுறை நடவடிக்கை களை எடுத்துள்ளது. இது லடாக் மக்களின் அடிப்படை உரிமைகள், ஜனநாயகம், சுதந்தி ரம் மீதான கடுமையான தாக்குதலாகும். இத்தகைய நடவடிக்கைகள் லடாக் உட்பட ஜம்மு - காஷ்மீர் மக்களின் அந்நியப்படுத்த லை மேலும் அதிகரித்திடும். எனவே, சோனம் வாங்சுக்கை உடன டியாக விடுதலை செய்வதுடன், மக்கள் மீது சுமத்தப்பட்ட அனைத்து வழக்குகளையும் நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை முழுமையாகப் பாது காக்க வேண்டும். போராட்டத்தின் நியாய மான கோரிக்கைகளை உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக லடாக்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் சேர்க்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.       (ந.நி.)